கணவருடன் காலி முகத்திடலுக்கு வந்த பெண்ணை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபருக்கு அபராதம்!
காலி முகத்திடலில் பெண்ணொருவரை துஷ்பிரயோகத் திற்கு உட்படுத்திய குற்றத்தை ஒப்புக்கொண்ட கடற்படை வீரருக்கு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இன்று அப ராதம் விதிக்கப்பட்டுள்ளது. 1500 ரூபா அபராத தொகைக்கு மேலதிகமாக பத்தாயிரம் ரூபாவை விஹாரையொன்றிற்கு வழங்குமாறும் கோட்டை பிரதம நீதவான் திலிண கமகே உத்தரவிட்டார்.
தனது கணவருடன் காலி முகத்திடலுக்கு சென்றிருந்த பெண்ணொருவரை மதுபோதையில் இருந்த குற்றவாளியான கடற்படை வீரர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கோட்டை பொலிஸாருக்கு செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட கடற்படை வீரரை பொலிஸார் கைது செய்தனர்.
0 comments :
Post a Comment