கூட்டணியின் இரகசியங்களை வெளியிடுகிறார் பசில்! - மேல் மாகாண முதலமைச்சர்
மார்ச் மாதம் 29 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலின் பின்னர் மேல் மாகாண சபையின் முதலமைச்சராக முன்னாள் முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவை நியமிப்பதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாபக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ குறிப்பிடுகிறார்.
மினுவங்கொட, ஹொரபொல்லவின் இடம்பெற்றகூட்டமொன்றின்போதே அமைச்சர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.
“பிரசன்னவுக்கு முதலமைச்சர் பதவி கொடுப்பதில் எவ்வித இடர்பாடும் இல்லை. வேயங்கொட பாலம் திறப்பு விழாவின்போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பிரசன்னவை நோக்கி, “பிரசன்ன, எங்கள் கட்சியில் இதுவரை முதலமைச்சர் அபேட்சகர் ஒருவர் பெயர் குறிக்கப்படவில்லை. என்றாலும், அந்த கொள்கையை உடைத்தெறிந்துவிட்டு, உங்களை முதலமைச்சர் அபேட்சகராக நான் நியமிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். அதற்கு பிரசன்ன, “அவ்வாறு தேவையில்லை. உங்கள் கொள்கையில் நீங்கள் திடமாக இருங்கள்.. எனக்கு மக்கள் ஆதரவு உண்டு. மக்களிடமிருந்து எப்படி வாக்குகளைப் பெறுவது என்பது எனக்குத் தெரியும். நான் பொதுமக்களின் வாக்குகளிலிருனந்தே தெரிவாவேன். இது எனக்கும், ஜனாதிபதிக்கும், பிரசன்னவுக்கும் மட்டுமே தெரியுமான இரகசியம். இன்று அது எல்லோரும் தெரிந்தாயிற்று” என்றும் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment