Saturday, February 22, 2014

இன்று ஒரு சிலருக்கு உணவு தேவையில்லை.. போதைப் பொருட்கள்தான் தேவையாக இருக்கிறது! - அஸ்கிரி பீட மாநாயக்க தேரர்

இன்று நாட்டு மக்களில் சிலருக்கு உணவை நிறுத்தினாலும், போதைப் பொருட்களை நிறுத்தக் கூடாது என்றதொரு எண்ணப்பாடு உள்ளதாக அஸ்கிரி பீட மாநாயக்க தேரர் குறிப்பிடுகிறார்.

சுகாதார அமைச்சர் மைத்ரிபால சிரிசேன, அவரது செயலாளர் உட்பட அதிகாரிகள் பலரும் மாநாயக்க தேரரைச் சந்திக்கச் சென்ற வேளையிலேயே மாநாயக்க தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

“போதைப்பொருள் திட்டத்தை நிறுத்த முடியாத இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது. சிலர் வெளிநாடுகளிலிருந்து போதைப் பொருட்களைக் கொண்டுவருகின்றார்கள்.. இன்னும் சிலர் இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து போதைப்பொருட்களை வெற்றிலை, பாக்குடன் கலந்து கொண்டுவருகின்றார்கள்.

கிராமப் புற, பின்தங்கிய கிராமங்களில் வாழ்கின்றவர்கள் உணவை விட வெற்றிலை பாக்குமீது அதிக பிரியம் காட்டுகிறார்கள். வெற்றிலைச் சுருளுடன் இருக்கின்ற பாக்கு, புகையிலை, சுண்ணாம்பு உடலுக்குக் கேடுவிளைவிப்பன.. இதுபற்றி அறியாதவர்களாக நம்மவர் இருக்கின்றார்கள்… இது நல்லதொரு விடயமா?” எனவும் தெளிவுறுத்தியுள்ளார் மாநாயக்க தேரர்.

(கேஎப்)

No comments:

Post a Comment