ஐ.நா.மனித உரிமைகள் ஆணையர் நவிபிள்ளையின் யோசனையை, அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளது!
இலங்கை தொடர்பாக சர்வதேச விசாரணையொன்று நடா த்தப்பட வேண்டுமென குறிப்பிடும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் யோசனையை, அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளது. மனித உரிமைகள் பேரவையின் 25வது கூட்டத்தொடருக்கு ஆணையாளர் பெப்ரவரி 12ம் திகதி வழங்கிய அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில், இலங்கை இந்த பதிலை சமர்ப்பித்துள்ளது. ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் இலங்கைக்கான நிரந்தர பிரதிநிதி அலுவலகத்தினூடாக, இது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மனிதாபிமான நடவடிக்கைகளின் இறுதிக்கட்டத்தில் மனித உரிமைகள் மீறப்பட் டதாக கூறி, சர்வதேச விசாரணையொன்று நடத்தப்பட வேண்டுமென்ற யோசனை நகலின் இறுதி அறிக்கை, ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையினால் அண்மையில் வெளியிடப்பட்டது. இதனை முற்றாக நிராகரித் துள்ளதுடன், அதனை வன்மையாக கண்டித்து ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் ஜெனீவாவில் உள்ள இலங்கைக்கான நிரந்தர பிரதிநிதி அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இறைமையுள்ள ஒரு நாட்டின் அந்தரங்க விவகாரங்களில் நேரடியாக தலையிடும் ஒரு செயல் இதுவென, அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இதனை சமர்ப்பிக்கும் போது கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து, கவனத்திற் கொள்ளப்படவில்லை. பக்க சார்பாகவும், அரசியல் நோக்கங்களுக்காகவும் அவர் செயற்பட்டுள்ளதாக, அப்பரிந்துரைகள் மூலம் தெரியவந்துள்ளது.
பயங்கரவாதத்தை பூண்டோடு ஒழித்துக்கட்டியதன் பின்னர் 2009ம் ஆண்டு மே 27ம் திகதி மனித உரிமை பேரவையின் 11வது கூட்டத்தொடர் முதல் இதுவரை இடம்பெற்ற கூட்டங்களில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை வெளியிட்டுள்ள அறிக்கைகள் மூலம், இது மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சுயாதீன, சர்வதேச விசாரணையொன்றை நடாத்த வேண்டுமென்பதை வலியுறு த்தும் ஆணையாளரின் கூற்றின் மூலம், இலங்கைக்கு எதிராக அவர் தொடர்ந்தும் செயற்பட்டு வருவதை, நிரூபிக்கின்றது என, அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. 2013ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஆணையாளரின் நகல் அறிக்கையுடன் இலங்கையின் பதில் அறிக்கையை சமர்ப்பித்து, அது பேரவையின் இணைய தளத்திலும் வெளியிடப்பட்டது.
எனினும், இம்முறை இலங்கையின் அந்த பதில் பிரசுரிக்கப்படாமல், இணைய தளத்தின் பிறிதொரு பகுதியில் இது குறிப்பிடப்பட்டுள்ளது அங்கத்துவ நாடுகளை கவலைக்குட்படுத்தியுள்ளது. இலங்கை தனது பதிலில் உயர்ஸ் தானிகரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள யோசனைகளை வன்மையாக கண்டித்துள்ள துடன், சகவாழ்வு நடவடிக்கைளில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுளு;ளதாக, அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கத்திற்கு உயர்ஸ்தானிகரின் யோசனைகளை ஒருபோதும் அங் கீகரிக்க முடியாது எனவும், இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானவையென்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித உரிமை பேரவையின் பரிந்துரைகளை இலங்கை நடைமுறைப்படுத்தவில்லையென கூறியிருப்பது, முற்றிலும் தவறானதாகும்.
நவநீதம்பிள்ளையின் அறிக்கை மற்றும் பரிந்துரைகள், இறைமையுள்ள ஒரு நாட்டின் அந்தரங்க நடவடிக்கைகளில் வீணாக தலையீடும் ஒரு செயலென்றும், இலங்கை அரசாங்கம் இதனை முற்றாக நிராகரிப்பதாகவும், மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது. குறுகிய நோக்கங்களுக்காக சில குழுக்கள் உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்டு வருகின்றன. இதனை அடிப்படையாக கொண்டு பக்கசார்பன முறையில் ஆணையாளர் தனது அறிக்கையை வெளியிட்டிருப்பது, இலங்கைக்கு கவலையை தருகின்றது. ஆணையாளரின் இலங்கை விஜயத்தின் பின்னர், அவர் எழுப்பிய கேள்விகள், புதிய அறிக்கையில், உள்ளடக்கப்பட்டுள்ளன.
அவை தொடர்பாக, இருக்கும் சாட்சிகளை சமர்ப்பிக்குமாறும், அவர் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து கண்டறிவதற்கு அவரிடம் உள்ள தகவல்களை பெற்றுத்தருமாறும், அரசாங்கம் விடுத்த வேண்டுகோள் தொடர்பாகவும், அவர் கரிசணை காட்டவில்லையென, அரசாங்கம் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment