Tuesday, February 25, 2014

முஸ்லிம்களுக்கு எதிரான அநீதிகளை அரசாங்கம் தடுத்து நிறுத்தினால் மட்டுமே அரபுல ஆதரவு என்கிறார் ரவூப் ஹக்கீம்!

இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் பற்றி ஜெனிவாவில் அரபு நாடுகளின் ஆதரவைப் பெறுவதென்றால் முஸ்லீம்களின் பள்ளிவாசல்கள் மற்றும் கலாச்சார விழுமியங்களை தாக்குதல்களை தடுத்து நிறுத்த அரசு உத்தரவாதம் வழங்கினால் மாத்திரமே அரபுநாடுகளின் ஆதரவை தக்க வைத்துக் கொள்ள முடியும். என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் ஊடகங்கங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் குறிப்பிட்டார்.

அதேவேளை இலங்கைக்கு எதிரான பிரேரணை விவகாரத்தில் மேற்குலகம் காட்டும் தீவிரம் சிறுபான்மை சமுகங்களுக்கான நியாயமான அதிகாரப் பகிர்வுக்கான ஒரு பேரம் பேசும் உபாயமே எனவும்; தெரிவித்தார்.

அண்மையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது, இலங்கை முஸ்லீம்கள் பிரச்சினைகள் கொண்ட அறிக்கையொன்றை முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் செயலாளர் அண்மையில் இலங்கைவந்த மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையிடம் சமர்ப்பித்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து அமைச்சர் விமல் வீரவன்ச> சம்பிக்க ரணவக்க ஆகியோர் பெரும்பான்மையினர் மத்தியில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரத்தில் அரசில் உள்ள அமைச்சர் ரவுப் ஹக்கீமும் அவரது செயலாளர் ஹசன் அலியும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் ஆதரவாகவும் ஜெனிவா மனித உரிமையிடமும் நவநீதம் பிள்ளையிடமும் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். இது அரபு நாடுகளுக்கும் அனுப்பபட்டுள்ளது எனத் தெரிவித்துவருகின்றனர்.

அமைச்சர் ஹக்கீம் அரசின் அமைச்சரவையில் இருந்துகொண்டு முஸ்லீம்களின் சிறுஉள்ளுர் பிரச்சினைகளையும், சர்வதேசத்திற்கும் கொண்டுசென்றுள்ளார். என விமல் வீரவன்ச கம்பஹா மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்திலும் அவர் நடாத்திய கட்சியின் ஊடகவியலாளர் மாநாடுகளிலும் தெரிவித்திருந்தார்.

இச் செய்தி சிங்கள பத்திரிகைகளிலும் வெளிவந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

உலக முஸ்லீம் லீக் மாதாந்த சஞ்;சிகையொன்றிலும் இலங்கை முஸ்லீம்களது மதவிவகாரம் சம்பந்தமாக கட்டுரையொன்றை வெளியீட்டுள்ளதாக முன்னாள் சபாநாயகர் எம்.எச்.முஹம்மத் இஸ்லாமியநிலையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அதனைக் தெரிவி;த்து> அதற்கு உரிய பதில் அறிக்கை அனுப்புமாறு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

(அஷ்ரப் ஏ சமத்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com