Wednesday, February 26, 2014

த.தே.கூ ஒருங்கிணைப்புக் கூட்டத்தை விரைவில் கூட்டுவீர்! சம்பந்தனுக்கு ரெலோ கடிதம். !

தமிழ் மக்கள் எதிர்நோக்கி நிற்கும் மிக முக்கியமான பிரச்சினைகள் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு விவாதித்து தீர்க்கமான முடிவுகளை எடுத்து செயற்பட வேண்டிய தேவையை உணர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் அதி உயர் பீடமான ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை மிக விரைவாக கூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனைக் கேட்டுள்ளது.

தமிழீழ விடுதலை இயக்கத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அடைக்கல நாதன், தமிழீழ விடுதலை இயக்கச் செயலாளர் நாயகம் கென்றி மகேந்திரன் ஆகியோர் ஒப்பமிட்டு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்ட விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் என்ற முறையிலும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுவின் தலைவர் என்ற முறையிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் என்ற முறையிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அதி உயர்பீடமான ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தை மிக விரைவாக கூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

கடந்த வட மாகாண சபைத் தேர்தலுக்குப் பின்னர் ஒரே ஒருமுறை பெற்ற ஒருங்கிணைப்புக் குழு பின்னர் இதுவரையில் கடந்த நான்கு மாதங்களாக எந்தவொரு ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமும் கூட்டப்படாத சூழ்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாக எமது மக்கள் மத்தியில் பல்வேறு தரப்பட்ட அபிபிராயங்கள் மேல் எழத் தொடங்கியுள்ளது என்பதையும் இந்த சந்தர்பத்தில் சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளோம் என்று தமிழ் ஈழ விடுதலை இயக்க தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அடைக்கலநாதன் தமிழ் ஈழ விடுதலை இயக்க செயலாளர் நாயகம் கென்றி மகேந்திரன் ஆகியோர் ஒப்பமிட்டு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

(யு.எம்.இஸ்ஹாக்)

No comments:

Post a Comment