போர்க் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கியேயாக வேண்டும்! - கூச்சலிடுகிறார் சம்பந்தனார்
நாட்டில் உண்மையான சமாதானத்தை ஏற்படுத்த வேண்டுமாயின், கட்டாயம் போர்க் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கியேயாக வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.
சகல மக்களும் ஏற்றுக் கொள்ளத்தக்க அரசியல் தீர்வு அரசாங்கத்தினால் வழங்கப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். அந்தத் தீர்வுக்குள் சமாதானமும் உள்ளடங்க வேண்டும். மேலும், போர்குற்றம் புரிந்தவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும் என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
“சர்வதேசத்தின் தலையீட்டின் காரணமாக, அரசாங்கம் தென்னாபிரிக்காவில் சுற்றுலாவில் கலந்துகொண்டு, அந்நாட்டின் உண்மையும் ஒருமைப்பாடும் பற்றி அளவளாவியுள்ளது. 02 ஆண்டுகளுக்கு முன்னர் தென்னாபிரிக்காவின் உண்மையும் ஒருமைப்பாடும் தொடர்பான ஆணைக்குழு தொடர்பில் இலங்கை அரசுக்கு கருத்துத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆயினும், இலங்கை அரசு அதனை நிராகரித்தது. எது எவ்வாறாயினும், வெளித் தலையீடுகள் காரணமாக அதனைப் பற்றிச் சற்றுச் சிந்திப்பதற்கு அரசாங்கம் தற்போது முன்வந்துள்ளது. நீண்டதொரு சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் உறுதியளிக்க வேண்டும். யுத்தம் தொடர்பிலான நடவடிக்கைகளுக்கு தீர்வு காணவும் வேண்டும்” எனவும் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, பலவந்தமாக யுத்தத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ள சிறுவர் போராளிகளை விடுவிக்குமாறு சர்வதேசம் கேட்டது. அப்போது பிபிசி உலக சேவைக்கு பேட்டி வழங்கிய சம்பந்தன் புலிகள் யாரையும் பலவந்தமாக போரில் ஈடுபடுத்தவில்லை என்று தெரிவித்தார்.
ஆனால் வன்னியிலிருந்து வெளியேறியிருக்கின்ற மக்களில் 100 விழுக்காடு பேரும், புனர்வாழ்வு பெற்று வெளியேறிய புலிகளும் புலிகள் சிறுவர்களை பலவந்தமாக போரில் ஈடுபடுத்தினர் என தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் புலிகளின் மனித உரிமை மீறலுக்கு துணை போன சம்பந்தன் போர்க்குற்றம் புரியாதவரா?
இவர் அன்று உலகிற்கு பொய்சொல்லி பயங்கரவாதத்திற்கு துணைபோனதற்கு என்ன தண்டனை? என்ற கேள்விகள் பரவலாக எழுகின்றது.
(கேஎப்)
1 comments :
Post a Comment