கூகுளுடன் இணைந்தது சாம்சங்!
தகவல் தொழில்நுட்பத் துறையின் பெருநிறுவனங்களான இணையதள ஜாம்பவான் கூகுளுக்கும், மொபைல் உலகின் ஜாம்பவான் சாம்சங்கிற்கும் இடையே அறிவுசார் தொழில்நுட்ப சொத்துகளின் மீது இரு நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை வளர்க்கும் பொருட்டும், செலவுமிகுந்த சட்ட மோதல்களின் அபாயத்தைக் குறைக்கும் வகையிலும்மான ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த புதிய ஒப்பந்தமானது அடுத்த பத்தாண்டுகளில் பெறவிருக்கும் காப்புரிமைகள் மீதும், தற்போது நடைமுறையில் உள்ள காப்புரிமைகள் மீதும் செல்லுபடியாகும் என்று சாம்சங் நிறுவனம் குறிப்பிட்டுள்ளதுடன் இந்த ஒப்பந்தத்தில் குறிக்கப்பட்டுள்ள நிதி விதிமுறைகள் பற்றி அறிக்கைகளில் வெளியிடப்படவில்லை.
இதே வேளை குறித்த இந்த உடன்பாடானது இரு நிறுவனங்களுக்கிடையேயா காணப்படும் சட்டரீதியான மோதல்களைக் குறைத்து கண்டுபிடிப்புகள் மீதான கவனத்தை அதிகரிக்கும் என்று கூகுள் நிறுவனத்தின் துணை பொது வழக்கறிஞரான ஆலன் லோ தெரிவித்துள்ளார்.
இதே வேளை இந்த இரு நிறுவனங்களும் ஸ்மார்ட் போன்கள் மற்றும் தொலைக்காட்சிகள் தயாரிப்பில் ஏற்கனவே இணைந்து செயல்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment