Saturday, February 22, 2014

இலங்கையிலும் பேஸ் புக்கிற்கு ஆப்பு!

பேஸ் புக் சமூக வலையமைப்பிலிருந்து இந்நாட்டு இளஞ்சந்த்தியினரைப் பாதுகாக்கும் பொருட்டு, அதனை உடனடியாக நிறுவனத்துவற்கு ஆவன செய்யப்படவுள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் அலுவல்கள் அமைச்சர் திஸ்ஸ கரலியத்த குறிப்பிடுகிறார்.

சென்ற சில நாட்களுக்கு முன்னர் பேஸ் புக் பாவனையினால் இளையோர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள். அந்நிகழ்வுக்கு முன்னரும் மிகவும் இழிந்த செயல்கள் பல முகநூலின் மூலம் இடம்பெற்றிருக்கின்றன. அவற்றைக் கருத்திற்கொண்டு உடனடியாக பேஸ்புக்கை தடைசெய்வது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பில் கருத்துரைத்துள்ள அச்சு மற்றும் இலத்திரனியல் ஆணைக்குழுவின் முக்கியஸ்தர் அநுஷ பெல்பிட, பேஸ் புக் தொடர்பில் அரசாங்கம் சரியான ஒரு முடிவை எடுத்து, அது பற்றித் தனக்குத் தெரிவித்தால் உடன் அதனை நிறுத்துவதற்கு ஆவன செய்யப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

1 comments :

SKT ,  February 23, 2014 at 1:22 AM  

Facebook is not suitable to asian cultures and can only bring negative stories and bad experiance, Need to ban in Asia as like in China.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com