காணாமற்போனோரைக் கண்டறிவதற்கான மேலதிகத் தகவல்களைத் திரட்டும் நோக்கில் கிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட நூற்றுக்கும் அதிகமானோருக்கு நேற்று தொலைபேசி ஊடாக அழைப்பு விடுக்கப்பட்டு மக்களிடம் விபரங்கள் சேகரிக்கப்பட்டன.
எவ்வாறாயினும், உத்தியோகப்பூர்வ அறிவித்தலின்றி மக்களிடம் ஆவணங்கள் பெறப்பட்டமை குறித்து கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரனிடம் வினவியது.
அவர் காணாமற்போனோர் தொடர்பான விபரங்களைத் திரட்டுவதற்காக ஏற்கனவே நடமாடும் சேவைகள் பிரதேச செயலகங்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், போதிய ஆவணங்களை சமர்ப்பிக்காத உறவினர்களிடம் இருந்து மேலதிக ஆவணங்கள் கோரப்பட்டிருந்ததாக குறிப்பிட்டார்.
ஆயினும், இந்த விபரங்கள் திரட்டப்பட்ட சம்பவத்திற்கும், காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லையென அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment