Wednesday, February 26, 2014

விளையாட்டுப் போட்டிக்கு யாரும் கூப்பிடவில்லை என கோபித்துக் கொண்டு இந்தியா சென்ற செல்வம் எம்.பி

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் ரெலோ செல்வம் அடைக்கலநாதன் அடிக்கடி இந்தியா சென்று வருவது வழமையானவிடம் தான். இருப்பினும் வெளிநாடுகளில் சுற்றித் திரிந்த செல்வம் எம்.பி வன்னிப் பாடசாலைகளில் இல்லமெய்வல்லுனர் போட்டிகள் தொடங்கிவிட்டதாக அறிந்ததும் உடனடியாக வன்னிக்கு வந்து வவுனியாவில் தங்கி இருந்தார்.

தான் வவுனியாவிலும் மன்னாரிலும் தான் நிற்கின்றேன் எனக் காட்டுவதற்கு தனது வாகனத்தில் பிரதான வீதிகளில் அடிக்கடி வலம் வந்தார். இருப்பினும் யாரும் கண்டு கொள்ளவில்லை. ஒருவேளை மக்கள் தன்னை மறந்திருப்பாங்களோ என்ற ஏக்கம் வேற அவருக்கு.

இந்தமுறை இல்லமெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளில் மாகாணசபை உறுப்பினர்கள் ஒரே போட்டி போட்டு போனதனால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மவுசு குறைந்திட்டு. இருந்தாலும் ஈபிஆர்எல்எவ் எம்.பி சிவசக்தி ஆனந்தன் எல்லா விளையாட்டுப் போட்டியிலும் கலந்து கொண்டார். இதோட செல்வதற்கு பயம் இன்னும் வந்திட்டுதாம். உடனே ஏன் ஆனந்தனை மட்டும் கூப்பிறாங்க என்ன கூப்பிடவில்லை என பலரிடம் விசாரித்திருக்கிறார்.

அப்ப பாடசாலை அதிபர்கள் சிலர் சொன்ன விசயம் செல்வத்தின்ர வயிற்றுக்க புளியைக் கரைச்ச மாதிரி இருந்தீச்சாம். ஆனந்தன் பாடசாலைக்கு வந்து காசு தருகிறார். நீங்களும் கொடுத்தால் போகலாம் என்றிட்டாராம்.

உடனே சொக் அடிச்ச மாதிரி நின்ற செல்வம் அந்த இடத்தில இருந்து எஸ்கேப்பாம். அது சரி இஞ்ச காசு கொடுத்தால் இந்தியா போய் எப்படி காசு செலவளிக்க முடியும். சரி பாவம் தானே வயசு போகப் போகுது விடுவம்.

தன்னை ஒருதரும் கூப்பிடல என்றதும் உடனே இந்தியா கிளம்பிட்டாராம்.. இனி எப்ப வருவார் என அவற்ற மக்கள் வன்னியிலே காத்து இருக்கின்றார்கள். இப்பவாவது எமது மக்களுக்கு புரி...சா சரி..

No comments:

Post a Comment