சென்னைக்கு தங்கம் கடத்த முயன்றவர் கைது!
13 லட்சத்து 85 ஆயிரம் பெறுமதியான தங்க தகடுகள் இரண்டை சட்டவிரோதமாக இந்தியாவிற்கு எடுத்துச் செல்ல முயன்ற இலங்கையர் இன்று (03) கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்முனை பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய நபரேகைது செய்யப்பட்டதாக சுங்கப் பிரிவு ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.
பயணப் பையில் தங்கத்தை மறைத்து வைத்து சென்னை செல்ல முயன்ற போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரிடம் சுங்கப் பிரிவு விசாரணைகளை மேற்கொள்கிறது.
0 comments :
Post a Comment