தமிழகத்தின் முடிவுக்கு எதிராக மத்திய அரசு வழக்கு! ராஜீவ் கொலைகாரர்களின் விடுதலைக்கு இந்திய உயர்நீதிமன்றம் தடை!
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற 4 பேரின் விடுதலைக்கு இந்திய உயர்நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்துள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற முருகன் , சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனையை கடந்த 18 ஆம் திகதி இந்திய உயர்நீதிமன்றம் இரத்து செய்தது.
அவர்களை விடுதலை செய்வது குறித்து. ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய பிற கைதிகளான நளினி, ராபட்பயாஸ், ரவிச்சந்திரன் ஜெயகுமார் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்யுமாறு தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா ஒரு அறிவிப்பையும் இட்டிருந்தார்.
தமிழகத்தின் இந்த முடிவை எதிர்த்து மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உயர்நீதிமன்றம் முருகன், சாந்தன் பேரறிவாளன் ஆகியோரின் விடுதலைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய ஏனைய 4 பேரின் விடுதலைக்கு எதிராக மத்திய அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து இந்நால்வரையம் விடுதலை செய்ய மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லையென மத்திய அரசு சார்பிலான வழக்கறிஞர் வாதிட்டார்.மனு தொடர்பான விசாரணையை 27 ஆம் திகதி வரை ஒத்தி வைத்த நீதிமன்றம் இன்று மீண்டும் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் நளினி, ரபட்பயாஸ், ஜயகுமார்,ரவிச்சந்திரன் ஆகிய 4 பேரை விடுவிப்பதற்கு இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்தது. மத்திய அரசின் மனு மீதான விசாரணை எதிர்வரும் மார்ச் 6 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
0 comments :
Post a Comment