Saturday, February 1, 2014

உலக யுத்த கடைசி இரு தினத்தில் எத்தனை உயிர்கள் பலி என கேட்க முடியும்! கண்ணாடி வீட்டுக்குள் இருந்துகொண்டு கல் எறியக் கூடாது!

எமது தாய்நாட்டை நேசிப்பது போலவே அதனைப் பாதுகா ப்பதிலும் சகலரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் நாட்டினதும் மக்களினதும் சுயாதீனத்தை ஒரு போதும் எவருக்கும் காட்டிக்கொடுக்க முடியாது எனவும், படையினர் உயிரைத் தியாகம் செய்து வெற்றி கொண்ட நாட்டை வேறு வழிகளில் அடிமைப்படுத்த சில வெளிநாடு கள் முயல்வதாக ஜனாதிபதி மகிந்த ராஜ பக்ஸ தெரிவித் துள்ளார்,

மத்துகமயில் புதிதாக நிர்மாணிக்கப் பட்டுள்ள பிரதேச செயலகக் கட்டடம், வர்த் தகக் கட்டடம், பஸ் நிலையக் கட்டடம் ஆகியவற்றை நேற்று உத்தியோக பூர்வமாகத் திறந்து வைத்த ஜனாதிபதி மத்துகம புனித மரியாள் வித்தியாலயத்தில் அமைச்சர் குமார வெல்கமயினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாடசாலை மாணவர்களுக்குக் கல்வி உபகரணங்கள் மற்றும் நூல்களை வழங்கும் நிகழ்விலும் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, நாம் 30 வருட கால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து இந்த நாட்டில் இளைஞர்கள் பலியாவதை நிறுத்தி னோம். தொலைக்காட்சிகளை அந்நாட்களில் பார்க்கும் போது அன்றைய தினம் பலியான மனித உயிர்களின் எண்ணிக் கையைக் கணக்கிட முடியும். யுத்தம் தொடங்கிய நாளிலிருந்து தினமும் இடம்பெறுகின்ற நிகழ்வுகள் இவை.நாட்டின் இறைமையையும் சுயாதீனத்தையும் காட்டிக்கொடுக்க எமது மக்கள் ஒருபோதும் தயாரில்லை என்பதை வெளிநாடுகளுக்கு ஞாபகப்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.

தொலைக்காட்சியில் நாம் பார்த்தது ஒரு பக்கம் பலியான இளைஞர்கள், படையில் பணிபுரிந்த சிங்கள இளைஞர்கள் அவர்கள் எனினும் இன்னொருபக்கம் வடக்கில் தமிழ் இளைஞர்கள் பலியாகினர். அந்த எண்ணிக்கை எவ்வளவு? யுத்தத்தில் ஒரு பக்கம் மட்டும் இறப்பதில்லையே இரு தரப்பிலும் தினமும் நூற்றுக் கணக்கான இளைஞர்கள் பலியாகினர். இந்த இளைஞர்கள் அனைவருமே எமது நாட்டின் சொத்துக்கள். இளைய சொத்துக்களை நாம் இழந்துள்ளோம். இதற்குக் காரணமான கொடூர யுத்தத்தை நிறுத்துவதற்கான பொறுப்பு எம்முடையதாயிருந்தது.

நாம் நாட்டை சுதந்திரமாக்கி இரு துண்டாக பிளவுபடவிருந்த நாட்டை ஐக்கியப் படுத்தினோம். எனினும் இதற்காக எமக்குக் கிடைத்த பிரதிபலன் தான் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஜெனிவாவில் குண்டு வெடிக்கின்றது. நாட்டில் இப்போது குண்டு வெடிப் பதில்லை. எனினும் ஆறு மாதத்துக்கு ஒரு முறை ஜெனீவாவில் மிதி வெடி வெடிக்கிறது.

இதனைக் கண்டு இங்குள்ள சிலரும் அதனை வாய்ப்பாக்கிக் கொண்டு தமக்கான சந்தர்ப்பத்தை எடை போடுகின்றனர். இதைப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடிக்கலா மென்று எதிர்க் கட்சியினர் கனவு காண்கின்றனர்.

நம் நாடு என்ற வகையில் சிந்திக்க வேண்டும் என்பதை நான் அத்தகை யோருக்குக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். நாட்டை அடிமைப்படுத்தி நாமும் அடிமைப்பட்டி ருந்த காலம் போதும். நாம் இங்கிலாந்திற்கும், போர்த்துக்கீசிற்கும் டச்சுக்காரரு க்கும் அடிமைப்பட்டிருந்தது போதும். நாம் இப்போது சுதந்திரமான மக்கள் இந்த சுதந்தர நாட்டில் வெவ்வேறு இனத்தவர் எம்மை அதிகாரம் செய்ய வெளியார் எம்மை அடிமைப்படுத்த நாம் இடமளிக்க முடியாது.

பொருளாதார ரீதியாகவும் மற்றும் வெவ்வேறு வழிகளில் வெவ்வேறு முறைகளில் எம்மை அடிமைப்படுத்த தற்போது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு ஐக்கிய நாடுகள் சபையை உபயோகப்படுத்துகின்றனர். மனித உரிமை பேரவையை வாய்ப்பாக்கிக் கொள்கின்றனர்.

உலகில் யுத்தம் நடைபெற்ற எந்த நாட்டிலும் இந்தளவு விரைவாக இனங்களுக் கிடையில் ஐக்கியம் ஏற்படுத்தப்பட்டதில்லை. அழிவுகளை மீளக் கட்டியெழுப்பிய தில்லை. நாமே அதற்கு முன்னுதாரணமானவர்கள். யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் 100 ற்கு 98 வீதம் மின்சாரம் வழங்கியுள்ளோம்' ரயில் பாதைகளை அமைத்துள்ளோம். அனைத்துத் தேர்தல்களையும் சுதந்திரமாக நடத்தியுள்ளோம். முன்னர் போல கணனி மோசடிகள் இடம்பெற்றிருந்தால் நிலமை மாறியிருக்கும்.

நாம் சுயாதீனமாகவும் சுதந்திரமாகவும் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண் டுள்ளோம். தேர்தல் நடத்தியது மட்டுமன்றி முன்னாள் புலி உறுப்பினர்களுக்கும் புனர்வாழ்வளித்து 14,000 பேரை விடுவித்துள்ளோம். அவர்களை படைகளிலும் பொலிஸ் துறையிலும் கூட இணைத்துக் கொண்டுள்ளோம்.

இத்தனையையும் முறையாக மேற்கொண்டுள்ள போதும் மனித உரிமை மீறப்பட்டு ள்ளதாக குற்றஞ் சாட்டப்படுகிறது. 30 வருட யுத்தத்தில் இறுதி மூன்று நாட்களில் நடந்தது என்ன என கேள்வியெழுப்பப்படுகிறது. எத்தனை பேர் பலியாகினர். எத்தனை பேர் காயமடைந்தனர். எத்தனை பேர் காணாமற் போயினர் என கேள்வி யெழுப்பப்படுகிறது.

இதே கேள்வியை மற்ற பக்கத்திலும் எழுப்பினால் எவ்வாறிருக்கும்? உலக யுத்தத்தின் போது கடைசி இரு தினத்தில் எத்தனை மனித உயிர்கள் பலியாகின என கேட்க முடியும். யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அப்போது அதனைச் செய்தவர்களுக்குத் தண்டனை எதுவும் கிடையாது. அவ்வாறானால் அந்தப் பக்கத்திலும் கேள்வி எழுப்பப்பட வேண்டும். அதனால்தான் கண்ணாடி வீட்டுக்குள் இருந்துகொண்டு கல் எறியக் கூடாது' என நாம் கூறுகின்றோம். இத்தகைய கண்ணாடி வீட்டுக்குள்ளி ருப்போர் கல் எறியும் போது கவனமாயிருக்க வேண்டும். என்னிடம கேள்வியெழுப் புபவர்களிடம் நான் இதனைத்தான் கூறி வருகின்றேன்.

இந்த நாட்டினதும் மக்களினதும் சுயாதீனத்தை எவருக்கும் ஒருபோதும் காட்டிக் கொடுக்க முடியாது. இது நாம் பிறந்த நாடு. இது எமது மன்னர்கள் ஆண்ட நாடு வீரர்கள் வாழ்ந்த நாடு இதனை காட்டிக் கொடுக்க முடியாது. நாம் இந்த நாட்டை நேசிப்பது போலவே இந்த நாட்டைப் பாதுகாப்பது முக்கியம். பெற்றுக்கொண்ட சுதந்திரத்தை காட்டிக் கொடுக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது. எமது மக்கள் அவ்வாறு செயற்பட தயாரில்லை என்பதை நான் சர்வதேசத்துக்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு தாய் நாட் டைப் பாதுகாக்க எப்போதும் செயற்பட வேண்டுமென சகலரையும் கேட்டுக் கொள்வதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

1 comments :

Anonymous ,  February 1, 2014 at 8:53 PM  

You are right Mr. President.
But, you are thinking and talking about the 18,19th century.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com