Saturday, February 1, 2014

நிஷா தேசாய் பிஸ்வால் யாழ். விஜயம்; பலதரப்பட்டவர்களுடனும் சந்திப்பு!

அமெரிக்கவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங் களுக்கான உதவி வெளியுறவுச் செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் இன்று(01.02.2014) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினர்களையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

மூன்று நாள் விஜயமாக இலங்கை வந்துள்ள நிஷா தேசாய்பிஸ்வால் நேற்று கொழும்பில் அரசு தரப்பினர்கள் மற்றும் எதிர் தரப்பினர்களைச் சந்தித்துக் கலந்து ரையாடியிருந்ததுடன் இன்று காலை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட துடன் இந்த விஜயத்தின்போது, வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு சென்று விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார்.

இதனைத் தொடர்ந்து யாழ். ஆயர் இல்லத்தில் ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகையைச் சந்தித்துக் கலந்துரையாடியதுடன் சிவில் சமுகத்தினரையும் சந்தித்துக் கலந்துரையாடினார். நிஷா தேசாய் பிஸ்வால் இந்த விஜயத்தின் போது இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் சிசனும் உடனிருந்தமை குறிப்பிடத் தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com