பகல் நேரத்தில் ஹெட்லைட் ஒளிரவிட்டதன் மூலம் விபத்துகள் குறைந்துள்ளன -பொலிஸார்
மேல் மாகாணத்தில் பகல் நேரத்தில் மோட்டார் சைக்கிள்களில் பயணிப்பவர்கள் முன்விளக்கை (ஹெட்லைட்) பகல் நேரங்களில் ஒளிரவிடுவதன் காரணமாக விபத்துகள் குறைந்துள்ளதுடன் தொடர்ந்தும் பொலிஸார் கண்காணித்து வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித்ரோஹன தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் வெற்றியளித்துள்ள நிலையில் இதுவரைக்கும் அதனைச் சட்டமாக்குவதற்கான தீர்மானம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.
கடந்த மாதம் 23 ஆம் திகதி முதல் மேல்மாகாணத்தில் மோட்டார் சைக்கிள்களில் பயணிப்பவர்கள் அதன் முன்விளக்கை (ஹெட்லைட்) பகல் நேரங்களில் ஒளிரவிட வேண்டும் என்ற ஒரு வேண்டுகோளை பொலிஸார் மோட்டார் சைக்கிள் சாரதிகளிடம் விடுத்திருந்தனர்.
இதனுடாக மேல் மாகாணத்தில் இடம்பெறும் வாகன விபத்துக்களை குறைத்துக் கொள்ள முடியுமாக இருக்கலாம் என்ற நோக்கிலேயே இவ்வேண்டுகோள் விடுக்கப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையிலேயே தற்போது விபத்துக்கள் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment