பொதுபல சேனா இயக்கம் கடந்த சில நாட்களாக வாய்பொத்தி மௌனியாக இருந்ததற்குக் காரணம் கையாலாகாத சோகத்தினாலும், மீண்டும் கையாலாகாத ஜெனீவா மாநாட்டினால் மீண்டும் வாய்பொத்தியிருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் குறிப்பிடுகிறார்..
எதுஎவ்வாறாயினும் நாட்டுக்கும், இனத்திற்கும், பௌத்த மதபீடத்திற்கும் எதிரான தீச்சக்திகளுக்கு எதிராக தொடர்ந்தும் வாய் பேசாதிருக்க மாட்டோம். இந்நாட்டு சிங்களவர்கள் அதளபாதாளத்திற்குத் தள்ளப்பட்டிருக்கின்ற போதும், அரசாங்கம் மௌனம் சாதித்துக்கொண்டிருப்பதன் காரணம் என்னவோ எனவும் தேரர் வினா தொடுக்கிறார்.
“நாட்டின் பெரிய பெரிய இடங்களுக்கு வால்பிடிப்பவர்கள் எங்களை ஒதுக்கி வைக்கப்பார்த்தார்கள். நாட்டில் இடம்பெறும் தீயவிடயங்கள் பற்றி நாங்கள் பேசும்போது ஜெனீவாவில் நாங்கள் தோற்றுவிடுவோம் இதனால் என்றார்கள். தற்போது நாட்டில் நடப்பவை பற்றி யாருக்கும் தெரிவதில்லை. தேர்தல் பற்றியும், வாக்களிப்பு பற்றி மட்டுந்தான் பேசுகிறார்கள். ஜெனீவாவில் தோல்வியைத் தழுவ பொதுபல சேனாவே காரணம் என்று கடைசியில் சொன்னார்கள்.” என்று தொடர்ந்து கருத்துரைத்தார் ஞானசாரர்.
(கேஎப்)
No comments:
Post a Comment