ஹிருணிக்காவை தோற்கடிக்கச் செய்யவே அரசு நடிகைகளை நியமித்துள்ளது!
கொழும்பு மாவட்டத்திலிருந்து கூட்டணிப் பட்டியலில் அதிகம் நடிகைகளைப் போடநினைத்திருப்பதன் காரணம் ஹிருணிக்காவுக்குக் கிடைக்கவுள்ள வாக்குகளை உடைப் பதற்காகவே என தாய்நாடு (மவுபிம) மக்கள் கட்சியின் தலைவர் ஹேமகுமார நாணயக்கார குறிப்பிடுகிறார்.
“இந்த நடிகைகளைப் நியமிப்பது நிச்சயமாக ஹருணிகாவின் வாக்குகளை உடைப்பதற்காகத்தான். அந்தப் பிள்ளை மிகப் பெரிய அநீதியிழைக்கப்பட்ட பிள்ளை. அவரது தந்தை அநியாயமாகக் கொலை செய்யப்பட்டார். ஹிருணிக்கா கல்வியறிவு நிரம்பியவர் மட்டுமல்ல.. உள்ளத்தை ஈர்க்கும் அழகான பெண்பிள்ளையும் கூட… அதனால் அவருக்கு நிறைய வாக்குகள் கிடைக்கும். அதனால்தான் அவரது வாக்குகளை உடைக்க பலாத்காரமாக இத்தேர்தலில் நடிகைகளை நியமித்திருக்கிறார்கள்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment