Monday, February 24, 2014

எனக்கு இப்போது செய்வதற்கு மீதமிருப்பது உண்ணாவிரதம் மட்டுமே! மைத்ரிபால சிரிசேன

பொலன்னறுவையில் பாடசாலை பஸ் பிரச்சினை தொடர்பில் 25 ஆண்டுகளாக எந்தவித தீர்வும் கிடைக்காமை தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

“பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்வதற்கு, பஸ் வண்டிகள் சரியாக செயற்படாமையினால், பள்ளி மாணவர்கள் தங்களது கல்வியைக் கைவிடுவது தொடர்பில் நான் எதிர்க்கட்சியில் இருந்தபோதும் பேசுகிறேன். இதுதொடர்பில் நான் 25 ஆண்டுகளாக பேசுகிறேன்.

முகாமையாளர்களிடம் போக்குவரத்து அமைச்சர்களிடம் இதுபற்றி எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். போக்குவரத்து அமைச்சருக்குச் சொன்னதும், புதிய பேருந்து வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடுகிறார். என்றாலும், ஒன்றிரண்டு மாதங்களே அவை ஓடுகின்றன. அதன் பிறகு பஸ் வண்டிளுகளுக்கு நடந்த்து என்ன என யாருக்கும் தெரியாது.

டிப்போவிலுள்ளவர்களுக்கு இலாபம் ஈட்டுவது மட்டுமே குறிக்கோளாக இருக்கிறது. அதன் பிறகு மிகப் பழைய பஸ் வண்டியொன்று பாதையில் விடப்படும். இப்போது நான் செய்ய வேண்டியது என்னவென்றால் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு முன்னால் உண்ணாவிரதம் இருப்பது மட்டுமே!”

(கேஎப்)

No comments:

Post a Comment