சூரியனை நோக்கிச் சென்ற தங்கச் செம்பு! இலங்கையில் அதிசய நிகழ்வு!!
தேவானம்பியதீச மன்னனுக்கும் முற்பட்ட கால வரலாறுடைய கஹடகஸ்திகிலிய குருகல்ஹின்ன தொல்பொருள் கல்லறைகள் உள்ள நிலப்பகுதியிலிருந்து 200 மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள கீழ் குடாப்பட்டி பிரதேசத்திலிருந்து தங்கச் செம்பு ஒன்று தோன்றி, சூரியனை நோக்கி பறந்து செல்வதை, அப்பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவன் கண்டுள்ளான்.
சென்ற 20 ஆம் திகதி தனது வீட்டில் வளர்க்கும் பசுக்களை மீண்டும் வீட்டுக்கு எடுத்துவருவதற்காக, குறித்த பிரதேசத்திற்குச் சென்றபோதே பளபளக்கும் தங்கத்தினாலான செம்பு ஒன்றைக் கண்டதாகவும், அதனைத் தான் எடுக்க முனைந்தபோது அது பறந்து சூரிய ஒளி வீசும் திசையை நோக்கி நகர்ந்ததாகவும், உடனே தான் தனது கைத்தொலைபேசியிலிருந்து அதனைப் படம் எடுத்ததாகவும் கிரிஷாந்த ஷாமல் பிரேமதிலக்க என்ற சிறுவன் குறிப்பிட்டுள்ளான்.
“நானும், எனது அம்மாவும், அம்மம்மாவும் மாடுகளை வீட்டுக்கு எடுத்துவரச் சென்றோம். மாடுகள் ஓடிவிடும் என்று அம்மா என்னிடம் சொன்னார். நான் திரும்பிவரும்போது பிரகாசமான ஒரு பொருளைக் கண்டேன். அருகிற்சென்று பார்க்கும்போது செம்பு போன்ற ஒரு பொருளைக் கண்டேன். கைக்கு எடுக்க முனைந்த போது, ஆடிஆடி மேலேமேலே செல்லலாயிற்று. அப்போது நான் எனது கைத்தொலைபேசியிலிருந்து நான்கைந்து படங்கள் பிடித்துக் கொண்டேன். அதன் பிறகு இவ்விடயம் பற்றி கிராம சேவகருக்கும், பிரதேச செயலகத்தைச் சேர்ந்த சூழலியல் அதிகாரிக்கும் கூற, அவர்கள் வந்து பார்த்தார்கள் என தனது அனுபவத்தை வெளிப்படுத்தியுள்ளான் சிறுவன்.
கஹடகெஸ்கிலிய குடாபட்டிய மகா வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி கற்கும் நிஷான் ஷாமல் மேலும் குறிப்பிடும்போது, இரண்டு மூன்று விநாடிகள் சுற்றுச் சுழன்றாடி அந்த தங்க நிறப்பொருள் சூரியன் உள்ள திசையை நோக்கி வேகமாகச் சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment