இன்று நாட்டு மக்களுக்கு மூன்று வேளை எப்படிப் போனாலும், ஒரு வேளை சாப்பிடுவதற்கும் வழியில்லாமல் இருக்கிறார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவச் சபை உறுப்பினரும், தேசிய இளைஞர் முன்னணியின் தலைவரும், கம்பஹா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான ருவன் விஜேவர்த்தன தெரிவித்தார்.
கம்பஹா பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பேரணி ஒன்றின்போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
விஜேவர்தன அவர்கள் அங்கு தொடர்ந்து கருத்துரைக்கும்போது,
“இன்று அரசாங்கத்துடன் தொடர்புற்ற பலரும் தேர்தலில் முன்னிற்பதற்கு ஏட்டிக்குப் போட்டியாய் நிற்பதற்குக் காரணம் நாட்டு மக்களுக்கு ஏதேனும் நன்மை செய்வதற்கல்ல. அவர்களின் வியாபாரத்தை, ஏமாற்றுவித்தையை, அவர்களின் அடாவடித்தனத்தை மேலோங்கச் செய்வதற்கே. அவ்வாறன்றி பொதுமக்கள் மீது அன்புக்காக அல்லவே அல்ல. கடந்த காலத்தில் நடைபெற்ற பெரும்பான்மையான பிரதேச சபை உறுப்பினர்களின் நடவடிக்கைகளிலிருந்து இது நன்கு தெரிகின்றதல்லவா?
இன்று நாட்டிலுள்ள மக்கள் மூன்று வேளை எப்படிப் போனாலும், ஒரு வேளை உணவுக்கும் திண்டாடுகிறார்கள். இவ்வாறு இழிந்து சென்ற பொருளாதரத்தை, சமூகத்தை வரலாற்றின் நெடுகிலும் தேடிப் பார்த்தால் கிடைக்கவே மாட்டாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
No comments:
Post a Comment