கண்டியிலுள்ள கெரிசன் மயானத்தினை பராமரிப்பதற்காக இளவரசர் சார்ள்ஸ் தனிப்பட்ட ரீதியில் நன்கொடை வழங்கியுள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரிட்டிஷ் மகாராணியின் பிரதிநிதியாக இளவரசர் சார்ள்ஸ் இலங்கைக்கு வருகை தந்தார். இதன் போது அவர் தலதா மாளிகைக்கு விஜயம் செய்து வழிபட்டதுடன் கண்டியில் ஆங்கிலேயர்கள் நல்லடக்கம் செய்யப்பட்ட கரிசன் மயானத்திற்கும் விஜயம் செய்தார்.
இங்கு 19வது நூற்றாண்டில் இலங்கையின் அபிவிருத்திக்காக பங்களிப்பு செய்த ஆங்கிலேயர்களின் பூதவுடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டன. குறிப்பாக சீமாட்டி எலிசபெத் கிரகரி, சேரல் ஜோன் பி.ஒய்லி ஆயிகோரின் பூதவுடல் இங்கு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த மயானத்தை இலங்கை அரசாங்கம் சிறப்பாக பராமரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளமைக்காக பொதுநலவாய யுத்த கல்லறைகளுக்கான மதிப்பிற்குரிய மேற்பார்வையாளர் வேத்திங்டன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதேவேளை இளவரசர் சார்ள்ஸின் நன்கொடையை வரவேற்றுள்ள இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் குறித்த கல்லறையை பாதுகாப்பதில் இளவரசர் சார்ள்ஸிற்குள்ள அக்கறையை நினைவுகூர்ந்தார்.
0 comments :
Post a Comment