Wednesday, February 26, 2014

சீனக் கம்பனிகள் தரகு தருவதே இல்லை! லக்ஷ்மன் வசந்த பெரேரா

இலங்கைக்கு தரகு திட்டத்தை ஏற்படுத்தியது ஜே.ஆர். ஆட்சிக் காலமே என பிரதியமைச்சர் லக்ஷ்மன் வசந்த பெரேரா குறிப்பிடுகிறார்.

கொழும்பில் இடம்பெற்ற பொதுக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் அவ்வாறு தெரிவித்தார்.

“1977 இல் ஆட்சிக்குவந்த ஐ.தே.க. அரசாங்கத்தின் திறந்த பொருளாதார கொள்கையின் கீழ் இந்நாடு தரகு கலாச்சாரத்தை ஏற்படுத்திக் கொண்டது என்பது யாவரும் அறிந்த விடயமாகும். இவ்விடயம் பற்றி இன்று நேற்று அரசியலுக்குள் நுழைந்தவர்களுக்கு எதுவும் தெரியாது. அவர்கள் அப்பாவிக் குழந்தைகள்.

சரியாகச் சொல்வதாயின், அன்றுதான் இந்நாட்டு விவசாயப் பொருளாதாரம் அடியோடு அழிந்தது. அதுமட்டுமன்றி, தேசிய கைத்தொழில்களைச் செய்து கொஞ்சமாகவேனும் வெளியில் தலை காட்டிக் கொண்டிருந்தவர்களின் இடங்கள்கூட இல்லாமலானது அந்த ஆட்சியிலேயே. அன்று வெளிநாடுகளிலிருந்து மிகவும் மட்டரகமான, விலை குறைந்த ஆடைகளை இறக்குமதி செய்த ஜே.ஆர். ஆட்சி, இலங்கையின் தேசிய ஆடைக் கைத்தொழிலை நாசம் செய்தது.

அன்று அவ்வாறு செய்த ஐ.தே.க. இன்று ஒன்றும் தெரியாத வெள்ளை மனதுக்கார்ர்கள் போல் கதைப்பது ஆடை அணிந்து கொண்டுதானா? சரியாகச் சொல்வதாயின், சீனக் கம்பனிகள் கொள்கை ரீதியாக யாருக்கும் தரகுப் பணம் கொடுப்பதில்லை. அதனால் யாராலும் சீனக் கம்பனிகளால் தரகுப் பணம் அடித்துக்கொள்ள முடியாது”

(கேஎப்)

No comments:

Post a Comment