அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், யாழ்ப்பாண மாக்களுக்குச் சொந்தமான காணிகளிலிருந்து இராணுவத்தினரை அகற்றுதல் உட்பட ஆறு வேண்டுகோள்களுடன் தமிழர் விடுதலை முன்னணியின் உறுப்பினர் ஒருவர் நேற்று (22) இலிருந்து யாழ்ப்பாணக் கச்சேரிக்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர், வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய அபேட்சகரான கந்தையா முனியாண்டிப்பிள்ளை தம்பிராசா என்பவரே.
அரசியல் கைதிகளை விடுதலை செய்.., தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் வட மாகாண சபையுடன் பேச்சுவார்த்தையை ஏற்படுத்து…, தமிழ் மக்களின் தேவைப்பாடுகள் பற்றித் தெரிந்துகொண்டது உலகமல்ல.. இந்தியர்களே.. இந்தியா இப்பிரச்சினையில் தலையிட்டு தீர்வுகொடு., வலிகாமத்தில் நிலைகொண்டு இராணுவத்தினரை அப்புறப்படுத்து, வெளிநாட்டு உதவிகளை தமிழ் மக்களுக்கும் பகிர்ந்தளி…, விடுதலை செய்யப்டுகின்ற அரசியல் கைதிகள் காணாமற் போவது எப்படி என்பதற்கு விளக்கமளிக்க… இவ்வாறு 6 வேண்டுகோள்களை முன்வைதைது உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்ட்டுள்ளார். என பொலிஸார் அறிவிக்கின்றனர்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு குறித்த நபருக்கு எவரதும் ஆதரவு கிடைக்காத போதும், அவர், தனியாக குறித்த இடத்தின் முன்பாக அமர்ந்து உண்ணாவிரதத்தை மேற்கொள்கின்றார் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
(கேஎப்)
தம்பி ஒரு கள்ளன். புலிகளின் பணத்தை கொழும்பில் ஏப்பம் விட்ட வர்த்தர்களின் முதலாவது இடத்தை இவன் பிடிக்கின்றான்.
ReplyDeleteபுலிகளின் பணம் நியாயமாக இவனிடம் உள்ளது.
இவனிடம் பணத்தை கொடுத்த சில புலிகள் மலேசியா தப்பிச் சென்றுள்ளனர்.
அவர்கள் அங்கிருந்து தம்பியிடம் தாங்கள் தந்த பணத்தில் ஒரு சிறு தொகையாவது தாருங்கள் நாங்கள் எங்காவது போய் உயிர் தப்பப்போகின்றோம் என கேட்டுள்ளனர்.
அவர்களை நாட்டுக்கு வாருங்கள் கட்டுநாயக்கவிலிருந்து கனடாவிற்கு நேரடியாக ஏற்றுகின்றேன் என அழைத்து நேரடியாக உள்ளே அனுப்பியுள்ளான்.
குறித்த நபர்களின் வாக்கு மூலத்தை இலங்கை நெட் பதிவு செய்துபிரசுரிக்க வேண்டும்.