தேசத்தை கட்டியெழுப்ப பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிவரும்– ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!
பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்காமல் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது குறிப்பாக குறிப்பாக நாம் பல சவால்களை சந்தித்துள்ளோம் என்பதுடன் எதிர்காலத்திலும் சவால்களைச் சந்திக்கத் தயாராக இருக்கின்றோம் என குளியாப்பிட்டியில் நேற்று 8வது தேசத்துக்கு மகுடம் தேசிய அபிவிருத்திக் கண்காட்சியை ஆரம்பித்துவைத்து உரையாற்றும்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
மேலும் ஆசியாவில் உன்னத நாடாக இலங்கையைக் கட்டியெழுப்பும் போது, பல சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்பது நாம் அறிந்ததே எனினும் இந்த சவால்களுக்கு முகம்கொடுக்கத் தயார் என்பதால்தான் நாம் இச்சவாலைப் பொறுப்பெடுத்துக் கொண்டோம்.
அனைத்துக்கும் இரண்டு பக்கங்கள் உள்ளன கடந்த கால ஆட்சியாளர்கள் பிரச்சினையை ஒதுக்கி நாட்டை ஆட்சிநடத்தப் பார்த்தனர் ஆனால் நாம் பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துக்கொண்டே ஆட்சி நடத்தப்பார்க்கின்றோம் என்பதுடன் அனைத்தையும் தெரிந்தே நாம் நாட்டின் ஆட்சியைப் பொறுப்பெடுத்தோம் கஷ்டத்தோடும் சரி நாம் பிரச்சினைக்குத் தீர்வு காணுவோம்.
பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிகளையும் நாம் தெரிந்துகொண்டுள்ளோம் என்பதுடன் எமது அரசாங்கம் பலவீனமான அரசாங்கம் இல்லை பலமான அரசாங்கம் எமது அரசாங்கத்தை நாம் மேலும் பலப்படுத்துவோம்.
இந்த நாட்டில் அனைத்து மக்களும் சகல வசதிகளையும், உரிமைகளையும், அபிவிருத்திகளையும் அனுபவிக்க வேண்டும், இதனை வெளிப்படுத்தும் நோக்கிலேயே வருடாவருடம் தேசத்துக்கு மகுடம் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது என்பதுடன் எதிர்கால பரம்பரைக்கு நாடு என்ற உணர்வையும், நாட்டின் மீதான நேசத்தையும் உயர்த்துவதாக இக்கண்காட்சி அமைகிறது.
எனினும் எமது செயற்பாடுகளை சிலர் எரிச்சலுடன் நோக்கினாலும், விமர்சித்தாலும், சர்வதேச அளவில் உலக வங்கி, ஐ.நா. அமைப்புகள் போன்ற பிரசித்தமான உலக அமைப்புகள் எமது செயற்பாடுகளை அங்கீகரித்துள்ளன.
ஐ.நா. உணவு நிறுவனம், யூ.என்.எச்.சி.ஆர்., உலக உணவு ஸ்தாபனம், உலக சுகாதார ஸ்தாபனம், உலக தொழிலாளர் அமைப்பு, உலக வங்கி போன்ற அமைப்புகள் எமது செயற்பாடுகளைப் பாராட்டியுள்ளது மட்டுமன்றி எமது பொருளாதார அபிவிருத்தியை உலக நாடுகள் முன்மாதிரியாகக் கொள்ளலாம் என்ற அங்கீகாரத்தையும் வழங்கியுள்ளன என்றார்.
தொடர்ந்து தமிழில் உரையாற்றிய ஜனாதிபதி நாட்டிலுள்ள சகல மக்களும் அபிவிருத்தியின் பயனை அடைய வேண்டும் என்பதுடன் இனம், மதம் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவரும் பயன்பெறவேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.
இதனைவிட தற்போது சகலரும் நிம்மதியாக வாழக்கூடிய உரிமையை பெற்றுக்கொடுத்துள்ளோம் எனக்குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment