கோத்தபாய இன்னும் என்னை “சூப்பர் மார்கட்” அழைத்துச் செல்லவில்லை!... ஆதங்கப்படுகிறார் முஸம்மில்
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு தான் ஒருபோதும் கடைக்குப் போகவில்லை எனவும், இன்னுமே கோத்தபாய தன்னை பலபொருள் அங்காடிக்கு (சுப்பர் மார்கட்) அழைத்துச் செல்லவில்லை எனவும் கொழும்பு மேயர் ஏ.ஜே.எம். முஸம்மில் குறிப்பிட்டுள்ளார்.
விகாரமாதேவி பூங்காவனத்தை புனர்நிர்மாணம் செய்து, அதனை மக்கள்வயப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே கொழும்பு மேயர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“எனது கட்சியில் சிலபேர், நான் ஆளும் கட்சியினருக்கு கடைக்குச் செல்வதாகச் சொல்கிறார்கள். என்றாலும் நான் கோத்தபாயவுக்குக் கடைக்குப் போகவில்லை. கோத்தா இதுவரை என்னை சுப்பர் மார்கட் அழைத்துச் செல்லவும் இல்லை.
நாங்கள் எல்லாவற்றையும் ஒரு கோணத்திலிருந்தே நோக்க வேண்டும். நாங்கள் எல்லாவற்றையும் சந்தோசமாகவே பார்க்க வேண்டும். சீற்றத்துடனும், குரோதத்துடனும் பார்க்கும்போது எங்கள் கண்களுக்குத் தென்படுவதில்லை. வாய் திறக்கவும் மாட்டாது. நான் அசல் முதலாம் தர “யுஎன்பி” காரனாவேன்!
ஆயினும் நான் எனது மனைவியை மாகாண சபையின் அபேட்சகராக நியமிக்க எண்ணினேன். ஆளுங்கட்சியிலிருந்து அல்ல… ஐதேகவிலிருந்து போட்டியிடவே முன்நிறுத்தினேன்.
ஆயினும் அரசாங்கத்திற்கு தேவையானது என்னவென்றால், எனது மனைவி ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து போட்டியிடுவதை இல்லாமற் செய்வது. அதுபற்றி அவர்கள் எதுவும் என்னிடம் சொல்லவில்லை. ஆயினும் எனது கட்சியினர் எனக்கு அதனைச் செய்துதந்தார்கள். அப்போது அரசாங்கத்திற்குக் கடைக்குச் சென்றது நானா? அவர்களா? எனவும்“ வினாதொடுத்துள்ளார் முஸம்மில்.
(கேஎப்)
0 comments :
Post a Comment