நடிகைகள் வெற்றி பெற்றால் நாடு விபச்சார விடுதியாகும்! - ஜயலால் ரோஹன
தேர்தலில் விருப்புவாக்குகளை கேட்கின்ற நடிகைகள் வெற்றிபெற்றால், நாடு விபச்சார விடுதியாக மாறிவிடும் என நடிகரும் விரிவுரையாளருமான ஜயலால் ரோஹன குறிப்பிடுகிறார்.
தேர்தலில் அரசியல் கட்சிகளிலிருந்து நடிகர் நடிகைகளை நியமிப்பது தொடர்பில் அவர் கருத்துரைக்கும்போது மேலும் தெரிவித்ததாவது -
‘இது ஒரு இக்கட்டான நிலை. இதனால் அரசியல்வாதிகள் பொதுமக்களை எவ்வளவு தூரம் சின்னத்தனமாய்க் கணக்கிடுகிறார்கள் என்பதை அறிந்துகொள்ள முடியும். வருகின்றவர்கள் நடிகர் நடிகைகள் அல்ல என்பதை அவர்களது பேச்சுக்கள் எடுத்துக் காட்டுகின்றன.
தலை உள்ள மனிதர்கள் இருந்தால் அவர்கள் வாக்களிக்காதிருக்க வேண்டும். என்றாலும், இப்படியான ஒரு நாட்டில் இருக்கின்ற எருமை மாடுகளுக்கு என்றுதான் மூளை தெளிவாகுமோ? உண்மையைச் சொல்வதாயின் மனிதர்கள் மாடுகள்… எங்கள் நாட்டுக்கு எதிர்காலம் இல்லை… சாப்பிட்டுச் சாப்பிட்டு நாடே குட்டிச் சுவராகியுள்ளது.
தேர்தலில் போட்டியிட வருகின்ற, பொதுமக்களின் வாக்குகளைச் சூரையாட வருகின்ற அந்த நடிகர் நடிகைகளுக்கு வாக்களித்தால் நிச்சயம் நாடு விபச்சார விடுதியாகும். வேறு ஒன்றும் நடப்பதில்லை. தாய்ப்பால் குடித்து வளர்ந்தவர்கள் நாங்கள். அதனால் அவ்வாறான முடியாத செயல்களில் ஈடுபட மாட்டோம். அதுமட்டுமல்ல நாங்கள் பாடசாலைகளுக்குச் சென்று கற்றிருக்கிறோம். இரண்டு மூன்று தடவைகள் ஓ.லெவலில் அந்தோகதியாகி.. வாழ வழி தெரியாது அநாதைகளாக இருந்து நடிக்க வரவில்லை.”
(கேஎப்)
0 comments :
Post a Comment