Tuesday, February 25, 2014

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஸ்தாபிப்பது குறித்த யோசனையை நிராகரித்த தென் ஆபிரிக்கா!

புலம்பெயர்ந்த புலிகள் சார்பு தமிழர்களால் தோற்றுவிக்கப்பட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிப்பது குறித்த யோசனை தென் ஆபிரிக்க அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தென் ஆபிரிக்காவிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர் நிமால் சிரிபால டீ சில்வாவிற்கு இந்த விடயம் தொடர்பான தகவல்கள் தெரிய வந்துள்ளதாக பென்தர, அல்பிட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் தென் ஆபிரிக்காவின் அரசாங்க உயர் அதிகாரிகளை சந்தித்து வினவியபோது, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒன்றிற்கு தமது ஆதரவு இல்லை என அவர்கள் குறிப்பிட்டதாக தெரிவித்த அமைச்சர் நிமால் சிரிபால டீ சில்வா புலிகளின் தலைவர் ஆயுதங்கள் கொண்டு பெற முடியாத தமிழீழத்தை, புலம்பெயர்ந்தவர்களின் துணைகொண்டு ருத்திரகுமார் பெற முயல்வதாகவும் தெரிவித்தார்.

இதனை விட இலங்கையினை தமது தாளத்திற்கு ஏற்ப ஆட்டுவிக்க சில நாடுகள் முனைவதாகவும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment