Saturday, February 1, 2014

வடக்கில் பிரதான மூலோபாய நிலையங்களுக்குள் மாத்திரம் இராணுவம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை எமக்கு பாரிய சவாலாகும்!

மூன்று தசாப்தங்களாக இடம்பெற்ற யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் பயங்கரவாதம் மீண் டும் தலைதூக்காமலும் புதிய பயங்கரவாத குழுக்கள் உருவாகாமலும் பாதுகாக்கும் பாரிய பொறுப்பு பாது காப்பு படையினரை சார்ந்ததாகும். இதில் புலனாய்வுத் துறையினருக்கு முக்கிய பொறுப்பு காணப்படுகிறது என பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார்.

அம்பலாங்கொடை கரந்தெனிய பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள இலங்கை இராணுவத்தின் புலனாய்வு தலைமையகத்தின் திறப்பு விழாவும் உயிர்நீத்த படை வீரர்களுக்கான நினைவுத்தூபி அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கோத்தபாய ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், யுத்தத்திற்கு பின்னர் வடக் கில் பிரதான மூலோபாய நிலையங்களுக்குள் மாத்திரம் இராணுவம் மட்டுப் படுத்தப்பட்டுள்ளது. இது எமக்கு பாரிய சவாலாகும். இந்த சவால்களுக்கு முகம் கொடுத்து நாட்டின் பாதுகாப்புக்கு உறுதி செய்யும் பொறுப்பு இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சார்ந்ததாகும் என தெரிவித்தார்.

அர்ப்பணிப்புக்கு மத்தியில் பெற்றுக்கொண்ட சமாதானத்தை உறுதிப்படுத்தும் பொறுப்பு புலனாய் வுத்துறையை சார்ந்ததாகும். யுத்த நடவடிக்கை முன்னெடுக் கப்பட்ட காலத்திலும் யுத்தத்திற்கு பின்னரான காலத்திலும் பாதுகாப்பு படை யினருக்கு சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

வடக்கில் குறுகிய காலப்பகுதிக்குள் இராணுவத்தினர் பாரிய அபிவிருத்திகளை மேற்கொண்டுள்ளனர். கண்ணி வெடிகளை அகற்றுதல், இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடி யமர்த்தல், சரணடைந்த முன்னாள் எல்.ரி.ரி.ஈ. உறுப்பினர்களுக்கு புனர் வாழ்வு அளித்தல் போன்ற பல்வேறு சவால்களுக்கு இராணுவம் முகம் கொடுத்து வந்தது. தொடர்ந்தும் வௌ;வேறு சவால்களுக்கு இராணுவம் முகம் கொடுத்து வருகிறது.

எந்தவொரு நடவடிக்கையை முன்னெடுப்பதாயினும் புலனாய்வுத் தகவல் மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். யுத்தத்தின் போது புலனாய்வுத் தகவல்கள் இந்த பாரிய வெற்றியை பெற்றுத்தந்தது. அதே போன்று யுத்தத்திற்கு பின்னரும் நாட்டின் பாதுகாப்பு மிக முக்கியமானது. அதற்கும் புலனாய்வுத் தகவல் மிகவும் இன்றிய மையாத ஒன்றாகும்.

எனவே தான் யுத்தம் முடிவுற்றாலும் புலனாய்வு பிரிவுக்கான எண்ணிக்கையை நாங்கள் அதிகரித்தோம். சகல விதமான சவால்களுக்கும் முகம் கொடுக்கும் வகையிலான பயிற்சிகளையும் வழங்கினோம். இந்நிலையில் தென்மாகாணத்தில் எமக்கு கிடைத்த இந்த விசாலமான நிலப்பரப்பை இராணுவத்தளபதியின் ஆலோ சனைக்கு அமைய இராணுவப் புலனாய்வு பிரிவுக்கு வழங்கியுள்ளோம். இராணுவ உயர் அதிகாரிகளுடனான ஆலோசனைக்கு பின்னர் இன்று இராணுவ புலனாய்வுத் தலைமையகம் நிறுவப்பட்டுள்ளது.

தற்பொழுது சட்டமும் ஒழுங்கும் நிலைநாட்டும் பொறுப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. என்றாலும் நாட்டின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு தொடர்ந்தும் செயற்பட வேண்டியது புலனாய்வுத் துறையின் பொறுப்பு என்றும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com