கமலேந்திரனை தாங்கள் விலக்கி போட்டாங்களாம். கூறுகின்றது ஈ.பி.டி.பி!
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினரும் வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான கந்தசாமி கமலேந்திரன் உடன் அமுலிற்கு வரும் வகையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அங்கத்துவ உறுப்புரிமையிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி உத்தியோகபூர்வாக அறிவித்துள்ளது.
கடந்த 16 ஆம் திகதி கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவிற்கு அமைவாக அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் நிர்வாகச் செயலாளரினால் யாழ். சிறைச்சாலை அத்தியட்சகர் ஊடாக சிறையிலுள்ள கமலேந்திரனுக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும், முன்னாள் நெடுந்தீவுப் பிரதேச சபையின் தலைவருமான டானியல் ரெக்ஷியன் என்பவரை கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் கமலேந்திரன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கமலேந்திரன் மீது சுமத்தப்பட்டுள்ள கொலைக் குற்றச்சாட்டினால் ஈழ மக்கள் ஜனநாயக் கட்சிக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களையும் அவமானங்களையும் களையக்கூடிய வகையில் அவரைக் கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கியுள்ளதாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 comments :
அவர் சிறையிலிருந்து வெளியே வரும்வரை நாடகத்திற்கு நீக்கப்பட்டுள்ளார் என்று சொல்லுங்களேன்.
கட்சியின் ஆலோசகரும் முக்கியஸ்தரும் வழக்காடுகின்றார். மறுபுறம் இந்த நாடகம் வேறு.
கேக்கிறவன் கேணயன் என்றால் கேப்ப இலையிலை பால் வடியுமாம்.
Post a Comment