2014, 2015ம் ஆண்டுகளில் இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக இந்திய மத்திய அரசாங்கம் 500 கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளது. இந்திய அரசாங்கத்தினால் இவ்வாறு ஒதுக்கப்பட்டுள்ள 500 கோடி ரூபா கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது கணிசமான அதிகரிப்பாகும்.
நேற்று இடைக்கால வரவு செலவு திட்டத்தை சமர்பித்த இந்திய நிதி அமைச்சர் பீ.சிதம்பரம், இந்திய வெளிவிவகார அமைச்சினால் வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக 8 ஆயிரத்து 335 கோடி ரூபாவை ஒதுக்கினார். இதன் போது இலங்கைக்கு 500 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை பங்களாதேஷிற்காக 350 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இது இலங்கைக்கு ஒதுக்கப்பட்ட தொகையை விட 150 கோடி ரூபா குறைவானதாகும். இதேவேளை பூட்டானுக்காக இந்திய அரசாங்கம் 5 ஆயிரத்து 500 கோடி ரூபாவையும், நேபாளத்திற்காக 480 கோடி ரூபாவையும், மியன்மாரின் அபிவிருத்தி திட்டங்களுக்காக 330 கோடி ரூபாவையும், ஆப்கானிஸ்தானின் அபிவிருத்தி திட்டங்களுக்காக 650 கோடி ரூபாவையும், ஆபிரிக்க நாடுகளின் அபிவிருத்தி திட்டங்களுக்காக 350 கோடி ரூபாவையும் ஒதுக்கியுள்ளது.
No comments:
Post a Comment