இலங்கைக்கு எதிரான சனல் 4 அலைவரிசையினால் தயாரிக்கப்பட்ட காணொளியில் நடிப்பவர்கள் கூலிக்கு அமர்த்தப்பட்ட எல்.ரி.ரி.ஈ உறுப்பினர்கள் என பிரிட்டிஸ் பாராளுமன்ற கன்சவட்டிவ் கட்சி உறுப்பினர் நெஸ்பி பிரபு தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பாக பிரித்தானிய பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற விவாத்தின் போதே நெஸ்பிபிரபு இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்பான யுத்த குற்றச்சாட்டுக்களை சுமத்துவதற்காக சனல் 4 அலைவரிசை சாட்சிகளாக பயன்படுத்தப்பட்ட அனைவரும் கூலிக்கு அமர்த்தப் பட்ட எல்.ரி.ரி.ஈ உறுப்பினர்கள் என தெரியவந்துள்ளது. எனினும் அண்மையில் பிரித்தனிய பாராளுமன்ற கட்டிட தொகுதியில் வைத்து வெளியிடப்பட்ட சுயாதீன ஊடக குழுவொன்று தயாரித்த லாஸ்ட் பேஸ் எனும் திரைப்படத்தில் எல்.ரி.ரி.ஈ உறுப்பினர் ஒருவர் 30 ஆண்டுகளாக அவர் முகம் கொடுத்த இக்கட்டான வாழ்க்கையை அம்பலப்படுத்தியுள்ளதாக நெஸ்பி பிரபு விவாத்தின் போது தெரிவித்தார்.
அந்த எல்.ரி.ரி.ஈ உறுப்பினர் குறித்த நிகழ்ச்சியின் ஊடாக உண்மையை வெளியிட்டுள்ளதாகவும் அவர் சுட்;டிக்காட்டியுள்ளார். இலங்கை சார்பில் அந்த திரைப்படத்தை பிரட்டிஸ் பாராளுமன்றத்தில் காட்சிப்படுத்துவதற்காக அத்திரைப்படத்திற்கு பின்னணி குரல் வழங்கிய பிரிட்டிஸ் நாட்டவரான ரிச்சட் மூடி எடுத்துச் சென்றிருந்தார்.
அந்த திரைப்படத்தை ஐக்கிய இராச்சியத்தில் காட்சிப்படுத்தியதன் பின்னர் அது தொடர்பாக நன்றியுணர்வோடு கருத்து தெரிவித்தவர்களுள் நெஸ்பி பிரபு உட்பட அந்த பாராளுமன்ற உறுப்பினராக இயன் கிறிஸ்லி பிரபுவும் அடங்குகின்றார்.
இத்திரைப்படம் திரையிடப்பட்டதன் பின்னர் கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கு பதில்களும் வழங்கப்பட்டன. அங்கு கருத்து தெரிவித்த ரிச்சட் மூடி பிரதமர் டேவிட் கெமரன் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு வருகைதந்த போது இலங்கையில் வாழும் பிரிட்டிஸ் பிரஜைகள் பெரும் சிரமத்திற்குட்பட்டதாக தெரிவித்தார்.
வட அயர்லாந்தில் மனித உரிமைகள் மீறப்பட்டு வருகின்றன. பயங்கரவாதத்தை பூண்டோடு ஒழித்துக் கட்;டிய ஒரு சிறிய நாட்டை இந்தளவு துரத்துவது மேற்கொள்ள கூடாதவொரு செயல் என மூடி தெரிவித்தார். வட அயர்லாந்தில் 25 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற அப்பாவி பொது மக்களின் படுகொலை தொடர்பாக பிரிட்டிஸ் படையினர் எவரும் இதுவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லையெனவும் மூடி ஞாபகப்படுத்தியுள்ளார்.
பிரிட்டிஸ் பிpரஜை என்ற வகையில்பிரிட்டிஸ் பிரதமர் இலங்கை மீது விரலை நீட்டும் போது தான் பெரும் சிரமத்திற்குட்பட்டதாகவும் மூடி தெரிவித்தார். எவருக்கேனும்இ லங்கையை விமர்சிக்க வேண்டியிருந்தால் முதலில் இலங்கைக்கு சென்று அங்குள்ள உண்மைநிலையை அறிந்து வருமாறும் மூடி மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் உண்மை நிலையை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துச் செல்லும் பாரிய பணியை ஆற்றிய பிரிட்டிஸ் நாட்டவரான ரிச்சட் மூடி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நேற்று இலங்கைக்கு வருகை தந்தார்.
No comments:
Post a Comment