Wednesday, February 26, 2014

கிளிநொச்சியிலிருந்து பளை வரையிலான ரயில் சேவை எதிர்வரும் 4ம் திகதி ஆரம்பம்!

கிளிநொச்சியிலிருந்து பளை வரையிலான ரயில் சேவை எதிர்வரும் 4ம் திகதி ஆரம்பிக்கப்படுமென, ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. இந்திய இர்கோன் நிறுவனத்தினால் வடபகுதிக்கான ரயில்பாதை துரிதமாக நிர்மாணிக்கப்படுகிறது. கிளிநொச்சியிலிருந்து பளை வரையிலான 21 கிலோ மீட்டர் நீளமான ரயில் பாதையை நிர்மாணிக்கும் பணிகள் தற்போது பூர்த்தியடைந்துள்ளன.

ஏப்ரல் மாதம் யாழ்தேவி ரயில் யாழ்ப்பாணம் வரை பயணிக்கவுள்ளதோடு, யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன்துறை வரையிலான ரயில் பாதையின் நிர்மாணப் பணிகள் ஜூன் மாதம் பூர்த்தி செய்யப்படவுள்ளது. ஓமந்தைக்கும் கிளிநொச்சிக்கும் இடையிலான ரயில் சேவை கடந்த வருடம் ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. வடபகுதிக்கான ரயில்பாதை முழுமையாக நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர், தெற்கிலிருந்து மேலதிக ரயில்கள் சேவையில் ஈடுபடவிருப்பதாக, ரயில்வே திணைக்களம் தெரிவித்தது.

பரந்தன், ஆனையிறவு ரயில் நிலையங்களும் புனரமைக்கப்படுகின்றன. அமைச்சர் குமார வெல்கம மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே. சின்ஹா ஆகியோர், இதனை திறந்து வைக்கவுள்ளனர்.

No comments:

Post a Comment