புலிகளால் கடத்தப்பட்டு காணாமல் போன 37 முஸ்லிம்கள் குறித்தும் ஆணைக்குழுவில் முறைப்பாடு!
யாழ் மாவட்டத்திற்கான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற போது யாழ் முஸ்லிம் மீள் குடியேற்றத்திற்கான சிவில் சமூக முன்னெடுப்பு அமைப்பினால் புலிகளால் கடத்தப்பட்டு காணாமல் போன 37 முஸ்லிம்கள் குறித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்முறைப்பாட்டை ஏற்றுக்கொண்ட ஆணைக்குழு காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டவர்களின் விபரங்களை இன்று யாழ் அரசாங்க அதிபர் பணிமனையில் நடைபெறவுள்ள ஆணைக்குழுவின் அமர்வில் சமர்ப்பிக்குமாறு கேட்டுள்ளனர்.
ஆணைக்குழுவிற்கு இவ்வமைப்பினால் வழங்கப்பட்ட முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 1990ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளால் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்ட விடயம் யாவரும் அறிந்தவையாகும்.
இக்காலகட்டத்தில் செல்வாக்குள்ள இயக்கமாக விடுதலைப் புலிகள் இருந்தனர் தவிர ஏனைய குழுக்கள், இந்திய இராணுவம் ஆகியோரால் காணமல் போன முஸ்லிம்கள் கடத்தப்பட்டள்ளனர் என்பதற்கு பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் ஆதாரம் உள்ளது மேலும் இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிகமான மக்கள் புத்தளம் மாவட்டத்தில் உள்ளனர் எனவே இவர்களுக்கும் இது போன்ற சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி அம்மக்களின் முறைப்பாட்டையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment