பஸ் பள்ளத்தில் வீழ்ந்து விபத்து : 26 பேர் காயம்
தனியார் பஸ் ஒன்று ராவணாகொட பகுதியில் 20 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் இதில் பயணித்த 26 பேர் காயமடைந்த நிலையில் பூண்டுலோயா மல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திம்புள்ள பொலிஸார் தெரிவித்தனர்.
மீரிகம அலவுவ பகுதியிலிருந்து அட்டன் திம்புள்ள பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ராவணாகொட பகுதிக்கு மரண வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் திரும்பும் போதே குறித்த விபத்துச் சம்பவம் இன்று அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, விபத்தில் படுகாயத்திற்குள்ளான 12 பேர் நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளதுடன் சாரதியின் கவனயீனமே விபத்து இடம்பெற்றதற்கான காரணம் என திம்புள்ள பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
0 comments :
Post a Comment