Thursday, February 27, 2014

புலிகளுக்காக ஆடாமல் விக்னேஸ்வரன் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நன்றாக வாசிக்க வேண்டும்!

த.தே.கூ புலம் பெயர்ந்தோர் மற்றும் விடுதலை புலி சார்ந் தோரின் ஆசைகளை நிறைவேற்ற செயற்படாமல் வடக்கு மக்களுக்கு உதவிசெய்யவேண்டும் எனவும் அரசியல் அமைப்பின் வரையறைகளை மீறி செயற்பட்டுவரும் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நன்றாக வாசித்து அதனை விளங்கிக் கொள்ள வேண்டுமென வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

'யாழ்ப்பாணத்திற்கும் தென் இந்தியாவிற்கும் இடையிலான நேரடி விமான சேவை வேண்டுமெனவும் வட மாகாண ஆளுநரையும் பிரதம செயலாளரையும் அகற்றிவிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட கூடியவர்களை நியமிக்க வேண்டுமெனவும் அவர் விரும்புகின்றார். ஆனால் மத்திய அரசாங்கத்தின் ஆதரவும் அங்கீகாரமும் இன்றி இவற்றில் எதையும் சாதிக்க முடியாதென்பதை புரிந்து கொள்ள வேண்டும்.' என தயாசிரி கூறினார்.

இளைப்பாறிய உயர் நீதிமன்ற நீதிபதியும் அரசியலமைப்பு சட்ட நிபுணருமான விக்னேஸ்வரன் இவ்வாறு பேசுவதை தன்னால் நம்ப முடியாது உள்ளதென ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளருடன் பேசிய போது ஜய சேகர இவ்வாறு தெரிவித்தார்.

சகல முதலமைச்சர்களுக்கும் பிரச்சினைகள் உள்ளன. அவர்கள் ஜனாதிபதி நியமித்த ஆளுநருடன் ஒத்துழைக்க வேண்டும்;: முதலமைச்சர்கள் விரும்பும் உத்தியோகதர்களை அவர்களால் எப்போதும் பெற முடிவதில்லை எனவும் அமைச்சரவை அமைச்சர்கள் கூட தாம் விரும்பும் பிரதியமைச்சரையோ அமைச்சு செயலாளரையோ பெற முடிவதில்லை. வடமாகாண சபை அரசாங்கத்தின் உதவியை எதிர் பார்த்தால் மோதல் கொள்கையை கைவிட்டு அரசாங்கத்துடன் ஒத்துழைக்க வேண்டும் என அவர் கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com