தந்தத்தால் செய்யப்பட்ட இந்திய சிம்மாசனம் உள்பட 1,200 பொருட்களை அழிக்க இளவரசர் வில்லியம் உத்தரவு!
இங்கிலாந்து அரண்மனையில் உள்ள யானை தந்தத்தால் அலங்காரம் செய்யப்பட்ட இந்திய சிம்மாசனம் உள்பட 1,200 பொருட்களை அழிக்க இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உத்தரவிட்டுள்ளார்.
இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் அரண்மனையில் ராணி இரண்டாம் எலிசபெத் காலத்தில் ஏராளமான வன விலங்குகளின் தோல், தந்தம், கொம்பு உள்ளிட்ட பொருட்களும், அவற்றால் செய்யப்பட்ட பொருட்களும் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட யானை தந்தத்தால் செய்யப்பட்ட விலையுயர்ந்த சிம்மாசனம் உள்பட பல்வேறு தந்த வேலைப்பாடுகள் மிக்க பொருட்களும் உள்ளன என்பதுடன் இவற்றை தற்போது அழிக்க உத்தரவிட்டுள்ளார் இளவரசர்.
இதுகுறித்து அரண்மனையின் வன உயிரின காப்பகத்தின் பொறுப்பாளர் ஜானே குட் ஆல் கூறுகையில், பக்கிங்காம் அரண்மனையில் உள்ள தந்த வேலைப்பாடுள்ள பொருட்களை அழிக்க இளவரசர் வில்லியம் உத்தரவிட்டுள்ளார் இதன்படி, இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட தந்த சிம்மாசனம், விசிறி, கலைப் பொருட்கள் உள்ளிட்ட 1,200 பொருட்களை அழிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
சட்டவிரோதமாக வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமீபத்தில் நடத்தப்பட்ட கூட்டத்தில் இளவரசர் வில்லியம் பேசியதுடன் தனது பேச்சில் விலங்குகளின் தோல்கள், கொம்புகள், தந்தங்கள் உள்ளிட்டவற்றால் செய்யப்படும் பொருட்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்று அவர் கருத்து தெரிவித்திருந்ததன்படியே தனது இப்பொருட்களை அழிக்க அவர் உத்தரவிட்டுள்ளார்.
இது மட்டுமல்லாது ஐநாவுடன் இணைந்து, அரிய வனவிலங்குகளை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட இளவரசர் வில்லியம் ஒப்புக்கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment