சுனந்தாவின் மரணம் இயற்கையானது அல்ல! சுனந்தாவின் கணவரான மத்திய அமைச்சரிடம் விசாரணை!
மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தாவின் மர ணத்தில் சந்தேகம் ஏற்படடுள்ளதால், சசிதரூரிடம் நாளை விசாரணை நடத்தப்படுகிறது.
பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் மெர் தராருடன் தனது கணவர் சசிதரூருக்கு தொடர்பு இருப்பதாக 16ஆம் தேதி சசிதரூரின் மனைவி சுனந்தா புகார் அளித்தார். இந்நிலை யில், சுனந்தா நேற்றிரவு முன்தினம் டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் உள்ள அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதையடுத்து, சுனந்தாவின் உடலை கைப்பற்றிய டெல்லி காவல்துறையினர், எய்ம்ஸ் மருத்துவமனையில் பரிசோதனை செய்தனர். இந்த பரிசோதனை நேற்று பிற்பகலில் முடிவடைந்தது. பரிசோதனை செய்த டாக்டர்கள், எதிர்பாராத, இயற் கைக்கு மாறான முறையில் சுனந்தா மரணம் அமைந்துள்ளது. சுனந்தா உடலில் காயங்கள் இருப்பதாகவும், விஷம் அருந்தியதற்கான தடயம் ஏதும் இல்லை என்றும் கூறியிருந்தனர்.
இதையடுத்து, சுனந்தாவில் மரணத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகத்தின் அடிப்படையில் அவரது கணவரும், மத்திய அமைச்சருமான சசிதரூரிடம் நாளை விசாரணை நடத்தப்பட உள்ளது.
0 comments :
Post a Comment