யாழ் உதயசூரியன் கடல் கரையில் பிரமாண்டமாக நடைபெற்ற பட்டம் விடும் போட்டி!
வல்வை விக்னேஸ்வரா சனசமூக நிலையத்தால் இன்று மிக பிரமாண்டமாக நடத்தப்பட்ட பட்டம் விடுதல் போட்டி உதயசூரியன் கடல் கரையில் மாலை 3.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றதுடன் இதில் சுமார் 60 இற்கும் மேற்பட்ட வண்ண வண்ண பட்டங்கள் ஏற்றப்பட்டதுடன் இப்போட்டியை கண்டு களிக்க யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் இருந்தும் மக்கள் திரண்டு வந்திருந்தனர்.
பெரும்பாலும் கடதாசியால் செய்யப்பட்ட மரபு முறையான பட்டங்கள் அதிகம் பறக்க விடப்பட்டாலும் இந்தப் போட்டியில் நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட பட்டங்களும் போட்டியில் பங்குபற்றியிருந்தன.
0 comments :
Post a Comment