தமிழ்- சிங்கள புதுவருட தினத்தன்று யாழ் தேவி ரயில் யாழ்.வரும்- யாழ்.இந்திய துணைத் தூதர் மகாலிங்கம்
எதிர்வரும் ஏம்பிரல் மாதம் வரும் தமிழ் சிங்கள புதுவருட தினத்தன்று யாழ் தேவி ரயில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரை பயணிக்கும் என யாழ்.சர்வதேச வர்த்தகக் கண்காட்சியின் ஆரம்பவைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய யாழ்.இந்திய துணைத் தூதர் வெ.மகாலிங்கம் தெரிவித்தார்.
மேலும் தற்போது பளை வரை யாழ் தேவி புகையிரதம் தனது கன்னிப்பயணத்தை ஆரம்பித்திருப்பதாக தெரிவித்த மகாலிங்கம் பளை முதல் யாழ்.காங்கேசன்துறை வரை மீளமைக்கப்பட்டு வரும் புகையிர பாதையின் பணிகள் இவ்வருட இறுதிக்குள் முடிவடைந்ததும் யாழ்தேவி புகையிரம் காங்கேசன்துறை வரை தனது பயணத்தை ஆரம்பிக்கும் என தெரிவிததார்.
மேலும் 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததை தொடர்ந்து வடக்கின் மீள் கட்டுமானத்திற்கு தேவையான பங்களிப்புகளை இந்திய அரசாங்கம் வளங்குவதாக தெரிவித்ததுடன் யாழ்.பலாவி விமான நிலையத்தில் இருந்து இந்தியாவிற்கான விமான சேவையை ஆரம்பிக்க இந்திய அரசாங்கம் ஆர்வம் கொண்டுள்ளதுடன் இதற்காக இலங்கை அரசாங்கத்துடன் போச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment