கொழும்பு தலைமன்னார் புகையிரத சேவை விரைவில்!
தலைமன்னார் பெரிய மடு வீதி ரயில் போக்குவரத்துக்கான கட்டுமான வேலைகள் துரிதகதியில் மேற்கொள்ளப்பட்டு வருவதால் இதன் பணிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் இவ் வேலைகள் பூர்த்தியடையலாம் என எதிர்பார்க்கப்படுகி ன்றது.
முப்பது வருடங்களுக்கு முன் கொழும்பிலிருந்து தலை மன்னார் வரைக்கும் சேவையில் ஈடுபட்டு வந்த ரயில் சேவை வன்செயல் காரணமாக 1984 ஆம் ஆண்டிலிருந்து இச்சேவை மதவாச்சியிலிருந்து தலைமன்னார் வரைக்கும் இடை நிறுத்தப்பட்டது.
யுத்தம் காரணமாக இப்பகுதியிலுள்ள தண்டவாளங்கள், புகையிரத நிலையங்கள் என்பன சேதமாக்கப்பட்ட நிலையில் தற்போது யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் கீழ் இர்க்கோ கம்பனி மதவாச்சியிலிருந்து தலைமன்னார் வரைக்குமான புகையிரத பாதை, புகையிரத நிலையம் மற்றும் அதன் பாலங்கள் ஆகியவற்றின் கட்டுமானப் பணி வேலைகள் தற்பொழுது துரிதமாக இடம்பெற்று வருகின்றன.
இதே வேளை தற்போது முருங்கன் மாதோட்டம் திருகேதீஸ்வரம், மன்னார் தோட்டவெளி, பேசாலை, தலைமன்னார் மற்றும் தலைமன்னார் பியர் ஆகிய இடங்களில் புகையிரத நிலையங்களும், புகையிரத மேடைகளும் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதுடன் புகையிரத கட்டுமானப் பணிகள் ஏப்பிரல் மாதத்துக்குள் முடியக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதால் விரைவில் கொழும்பு தலைமன்னார் புகையிரத சேவைகள் நடைபெறும் சாத்தியம் காணப்படுவதாக இப்பணிகளில் ஈடுபட்டுள்ள இர்க்கோ கம்பனி ஊளியர்கள் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment