இலங்கை கடற்படையினருக்கும் கிழக்குப் பல்கலைக் கழகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து
இலங்கை கடற்படையினருக்கும் கிழக்குப் பல்கலைக்கழ கத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச் சாத்திடப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினருக்கு முகா மைத்துவ பயிற்சி வழங்குவது தொடர்பாக கிழக்குப் பல் கலைக் கழகத்திற்கும் இலங்கை கடற்படையினருக்குமி டையே புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட் டுள்ளது.
கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சார்பில் பல்கலைக் கழக துணைவேந்தர் கலாநிதி கி.கோபிந்தராஜாவும் இலங்கை கடற்படை சார்பில் பயிற்சி பிரிவு பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் எம்.யு.கே.வி.பண்டார ஆகியோர் இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நேற்று கைச்சாத்திட்டனர்.
முகாமைத்துவம் சம்பந்தமாக கற்கை நெறிக்கு கிழக்குப் பல்கலைக் கழகத்தின் விரிவுரையாளர்களை வழங்குதல் மற்றும் பல்கலைக் கழக மாணவர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சிகளை பெற்றுக் கொடுத்தல் போன்ற இருதரப்பினருக்கும் பயன்தரக் கூடியவகையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்தியுள்ளது.
கிழக்குப் பல்லைக் கழகத்தின் மட்டக்களப்பு வந்தாறூமூலை வளாகத்தல்இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு நடைபெற்றது.
0 comments :
Post a Comment