டும்…டும்…டும் பிரபாகரன் மீண்டும் வருவார்! – கோபலசுவாமி
எல்.ரீ.ரீ.ஈ அமைப்பின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் மீண்டும் வருவார் என எதிர்வு கூறியுள்ளார் இந்திய எம்.டீ.எம்.கே. கட்சியின் பொதுச்செயலாளர் வை. கோபலசுவாமி.
மகிந்த ராஜபக்ஷ ஆட்சியின் கீழ் கைகட்டி வாய்பொத்தி நிற்போரை மீட்டெடுப்பதற்காக பிரபாகரன் இவ்வாறு வரவுள்ளதாக அவர் குறிப்பிடுகிறார்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, 8 ஆண்டுகள் தலைமறைவாகியிருந்த வேலுநாச்சியார் பின்னர் வெளியேவந்து, வெள்ளையரைத் தாக்கி, நெல்லை, சிவகங்கை முதலான இடங்களை வெற்றிகொண்டார் என்பதை நினைவுறுத்திய அவர், அதேபோல, பிரபாகரனும் வந்து பொதுமக்களை மீட்டெடுப்பார் எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிரபாகரன் மீண்டு வந்ததன் பின்னர், ஆயிரக் கணக்கில் அப்பாவித்தனமாக கொன்றொழிக்கப்பட்ட பொதுமக்களுக்காக குரல்கொடுத்து, அவ்வாறு கொன்றொழித்தவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்குவதற்கு ஆவன செய்வார் எனவும் இந்தியாவின் நெல்லையில் இடம்பெற்ற விழாவொன்றின்போது குறிப்பிட்டதாக இந்திய ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.
என்றாலும், கோபாலசுவாமியின் இந்தக் கூற்று வெறும் வெற்றுக் கனவாகுமே தவிர, பிரபாகரன் ஒருபோதும் வெளிவர மாட்டார் எனவும், அவர் போய்ச்சேர வேண்டிய இடத்திற்கு முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இறுதிப் போரின் போது போய்விட்டார் எனவும் பெரும்பாலானோர் குறிப்பிடுகின்றனர்.
அத்துடன், புலம்பெயர் புலிப்பினாமிகள் பிரபாரகரனைத் தலைமீது தூக்கி வைத்துக் கொண்டாடியபோதும், அவர்கள் ஈழத்தவர்களுக்காக – இலங்கையருக்காக செய்தது எதுவுமில்லை எனவும், வெறும் வெற்றுப் பேச்சுக்களுடனேயே அவர்களது காலம் கழிகின்றது எனவும் இவ்விடயம் தொடர்பின் அரச தரப்பினர் கருத்து வெளியிடுகின்றனர்.
(கேஎப்)
1 comments :
Eppidi varuvaar
Post a Comment