Wednesday, January 15, 2014

கல்முனை மாநகர சபையில் வரி அறவீட்டாளர்களாக ஈடுபடுத்தப்பட்டவர்கள் பணமோசடியில்! கவனம்! கவனம்!

கல்முனை மாநகர சபை ஆணையாளரினால் நியமிக்கப் பட்ட வரி அறவீட்டு உத்தியோகத்தர்கள் கல்முனை மாநகர சபையில் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கல் முனை மாநகர சபையினால் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட வரி அறவீட்டு உத்தியோகத்தர்களின் சேவை முடிவுறுத்தப் பட்டுள்ளதால் அவர்களிடம் சோலை வரிகளை செலுத்த வேண்டாம் என மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, பொது மக்களைக் கேட்டுள்ளார்.

கல்முனை மாநகர சபை பிரதேசங்களில் வீடு வீடாகச் சென்று சோலை வரிகளை அறவிடும் பொருட்டு கடந்த 2012ஆம் ஆண்டு 25 பேர் தற்காலிக அடிப்படையில் நடுக்கட்ட உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டனர். எனினும் அவர்களுடைய சேவை 2013 டிசம்பர் 31ஆம் திகதியுடன் முடிவுறுத்தப்பட்டுள்ளதால், தங்கள் வீடுகளுக்கு வந்து சோலைவரிக் கட்டணங்களை யாராவது கோரினால், அவர்களிடம் அதனைச் செலுத்த வேண்டாம் என மாநகர ஆணையாளர், பொது மக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றார்.

அதேவேளை சோலை வரி செலுத்த வேண்டிய பொது மக்கள், கல்முனை மாநகர சபைக்கு நேரடியாக வருகை தந்து- உரிய அதிகாரிகளிடம் அதனைச் செலுத்தி- பற்றுச் சீட்டை பெற்றுக் கொள்ளுமாறும் அவர் பொது மக்களை கேட்டுக் கொள் கிறார். அதேவேளை கடந்த காலங்களில் தற்காலிக நடுக்கட்ட உத்தியோகத்தர் களினால் பொது மக்களிடம் அறவிடப்பட்ட சோலை வரிப் பணங்கள் உரியவர்களினால் கல்முனை மாநகர சபையில் ஒப்படைக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை நாங்கள் கல்முனை மாநகர சபைக்கு வரி செலுத்தி உள்ளோம் அதற்கான பற்று சீட்டுக்களும் எம்மிடம் உள்ளது. மாநகர சபையில் பணம் செலுத் தப்பட வில்லை என்றால் இதற்கான பொறுப்பை மாநகர ஆணையாளர்தான் பொறுப்பேற்க வேண்டும் அல்லது மாநகர சபை சட்டத்தின் படி பண கையாள்கை செய்யும் உத்தியோகத்தர்களிடம் ஆதனப் பிணை அல்லது பிணைப்பணம் அறவிடப்பட்டிருக்கும் அதில் அவர்கள் செலுத்த வேண்டிய தை அறவிட முடியும் என வரி இறுப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

யு.எம்.இஸ்ஹாக்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com