Tuesday, January 28, 2014

மனதை உருக்கும் நிகழ்வு - மேன்முறையீட்டு நீதிமன்ற வளாகத்தில் சம்பவம் !!

நான்கு வயது சிறுவன் ஒருவன் தனது தாயை மீண்டும் சிறைக்கு கொண்டு செல்வதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் ஆயத்தமான போது, உணர்ச்சி வசப்பட்டு கதறியழுது தாயை தழுவிக்கொள்ள முயன்ற சம்பவமொன்று நேற்று மேன்முறையீட்டு நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. இந்த நான்கு வயது சிறுவனின் பெற்றோர் இருவரும் மனித கடத்தல் வழக்கில் குற்றவாளிகளாக காணப்பட்டு ஒன்பது வருட கடூழிய சிறைத்தண்டனையை அனுபவித்து வருகி ன்றனர்.

இவர்களின் மேன்முறையீடு தொடர்பாக இப்பிள்ளையின் தாய் நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் மீண்டும் சிறைச்சாலைக்கு கொண்டு செல்ல சிறை ச்சாலை வாகனத்தில் ஏற்றப்பட்ட போது தானும் தாயுடன் போகப் போவதாக அந்த சிறுவன் கதறியழத் தொடங்கினான். அச்சிறுவனை சமாதானப்படுத்துவதற்கு உறவி னர்கள் முயன்ற போதிலும் அவனது அழுகை அதிகரித்ததோடு தாயிடம் ஓடிப் போக வும் முயன்றான்.

இது துன்பியல் நாடகத்தின் காட்சியொன்று போல இருந்தது. அவனது அழுகையும் தாயின் பாசத்திற்கான ஏக்கமும் நீதிமன்ற வளாகத்திலிருந்த சிறை அதிகாரிகள் உட்பட அங்கிருந்த சகலரது இதயத்தையும் தொட்டது. இந்த பிரச்சினையின் மனிதாபிமான பக்கத்தை கருதில் கொண்ட சிறையதிகாரிகள் அந்த பிள்ளையை தாய் தூக்கி அரவணைத்து ஆறுதல் கூறுவதற்கு அனுமதித்தனர். பின்னர் ஒருவாறு மகனிடமிருந்து தாயைப் பிரித்து சிறைச்சாலை வாகனத்தில் அதிகாரிகள் ஏற்றிச் சென்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com