Monday, January 27, 2014

வடமாகாண சபை அமர்வில் பங்கேற்ற கொலைச் சந்தேக நபர் !


ஈபிடிபியின் நெடுந்தீவுப் பிரதேச சபைத்தலைவர் றெக்ஷியனின் கொலையின் சந்தேக நபரான எதிர்க்கட்சித் தலைவர் கமலேந்திரன் கைது செய்யப்பட்டு கடந்த இரு மாதங்களாக விளக்க மறியிலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் வடமாகாண சபையின் ஐந்தாவது அமர்வுக்கு இன்று (27.01.2013) காலை 9.30 மணியளவில்ஆயுதம் தாங்கிய பொலிசார் மற்றும் சிறைச்சாலை உத்தியோகஸ்தர்களின் பாதுகாப்புடன் சபைக்கு அழைத்து வரப்பட்டார்.

பின்னர் சபை அமர்வில் கமல் கலந்து கொண்டிருந்த போது பொலிஸ் மற்றும் சிறைச்சாலை உத்தியோகஸ்தர்கள் பார்வையாளர் பகுதியில் அமர்ந்து கமலை அவதானித்து கொண்டிருந்ததுடன் சபைஅமர்வு நிறைவு பெற்றதும் மீண்டும் அழைத்து சென்றனர். 

கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது இன்றைய வடமாகாண சபை அமர்வில் கலந்து கொள்ள எதிர்க்கட்சித் தலைவர் க.கமலேந்திரனுக்கு நிபந்தனைகளுடன் நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

1 comments :

சிவச்செல்வன் ,  January 27, 2014 at 9:31 PM  

ஐயோ தப்பிச்சு வட மாகாண சபை. நீதிபதியாருக்கும் நன்றி. இந்த புத்திஜீவி சபை அமர்வில் பங்கேற்கா விட்டால் சபையின் நிலை என்னவாகும்.

இவர் எத்தனை பட்டங்களை பெற்றவர். அத்தனையையும் வைத்து மக்களுக்கு பெரும் சேவை ஆற்றுவார் என்றெல்லே யாழ்பாணத்து பெருஜன(ட)ங்கள் இவரை சபைக்கு அனுப்பினது.

என்ன ஒரு கொலையைத்தானே செய்தவர் அதற்கு அவரை சபைக்கு வராமல் முடக்கினால் சபையின் நிலை என்னவாகும்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com