Friday, January 3, 2014

நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதிமுறை ஒழிக்கப்பட வேண்டும்! - சோபித்த தேரர் (படங்கள் இணைப்பு)

‘இந்த நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத் தந்த தலைவர்களுள் ஒரு சிரேஷ்ட தலைவர் ரீ.பி. ஜாயா. அவர் போன்ற தலைவர் இந்த நாட்டில் இன்னும் எந்த சமூகத்திலும் உருவாகவில்லை. இந்த நாட்டின் அரசியல் முறையில் உள்ள அதிகாரம் பெற்ற ஜனாதிபதி முறைமையை நாம் ஒழிக்க வேண்டும். அதற்காக முஸ்லிம்களாகிய நீங்களும் அணிதிரளவேண்டும். இந்த நாட்டில் உள்ள சுயாதீன தேர்தல், பொலிஸ,நீதி நியாயம், கல்வி மற்றும் நிர்வாக முறைமைகளை மாற்றியமைப்பதற்கு முன்வாருங்கள்’ என கோட்டே பிரதம தேரர் கலாநிதி மாதுலுவே சோபித்த தேரர் அழைப்பு விடுத்தார்.

கலாநிதி ரி.பி ஜயாவின் 124வது வருட நினைவுச் சொற்பொழிவு நேற்று கொழும்பு முஸ்லிம் பெண்கள் கல்வி வட்ட நிலையத்தில் நடைபெற்றது. இவ் வைபவத்தில் பிரதம பேச்சாளராக கலந்து கொண்டு உரையாற்றும்போதே மாதுலுவே தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு உரையாற்றுகையில்,

நெல்சன் மண்டேலா போன்றோர் தென்னாபிரிக்காவில் சகல சமூகங்களும் சமமாக வாழ்வதற்காக ஏற்படுத்திக் கொடுத்த அரசியல் முறைமை போன்று இலங்கையிலும் ஏற்படுத்தப்பட வேண்டும்.

ரி.பி. ஜாயா பௌத்த பாடசாலையான ஆனந்தக் கல்லூரியை ஆசிரியராக சேவையாற்றும்போது அப் பாடசாலை நிர்வாகம் பிலிப் குணவர்த்தனவை அகற்ற முற்படும்போது தன்;னையும் சேர்த்து விலக்குமாறு ஜாயா கேட்டுக்கொண்டார். அதற்காக பிலிப்குணவர்தனவையை அப்பாடசாலையில் இருந்து அகற்றாமல் அவரோடு சேர்ந்து சேவையாற்ற பாடுபட்டவர் ஜாயா.

அவர் போன்ற தலைவர்கள் தற்காலத்தில் நமது நாட்டில் இல்லை.

இந்த நாட்டில் உள்ள பொலிஸைக் கூட நாம் நம்பமுடியவில்லை. அவர்களே போதைப்பொருள் விற்பவர்களாக மாறியுள்ளனர். இந்த நாட்டில் உள்;ள இலஞ்ச ஆணைக்குழுத் தலைவரேயே கைது செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது எனத் தெரிவித்தார். அஷ்ரப் ஹ_சைன் தலைமையில் நடைபெற்ற இந்நினைவுகூரல் நிகழ்வில், முன்னாள் வெளிநாட்டு அமைச்சர் ரோஹித்த போகலாவெலவும் இங்கு உரையாற்றினார்.

(அஷ்ரப் ஏ. சமத்)


No comments:

Post a Comment