எல்.ரி.ரி.ஈ யினர் என்ன செய்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்! மார்ச் மாத சவாலை எதிர்கொள்வோம்!
இலங்கைக்கு எதிரான சத்திகளின் ஆதரவுடன் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் ஏற்கனவே இரண்டு முறை இலங் கைக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்த நிலையில், மார்ச் மாதம் நடைபெற இருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் சபை கூட்டத்தில் 3வது முறையாக இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர இருக்கின்றதாக தெரிவிக்கப்படுகின்றது
அவ்வாறு இலங்கைக்கு எதிராக ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டால் அதனை எதிர்கொள்வோம் என அமைச்சர் மஹிந்த சமரசிங்கே கூறியுள்ளார்.
மேலும் மார்ச் மாதம் எங்களுக்கு சவாலாக உள்ளது. நாங்கள் எந்தவித சவா லையும் எதிர்கொள்வோம். அதற்காக வடக்கு மாகாணத்தில் உள்ள இலங்கை இராணுவத்தை வாபஸ் வாங்காது. இராணுவ வீரர்கள் நாட்டிற்கு துரோகம் செய்ய வில்லை. விடுதலைபுலிகளுடன் போரிட்டபோது இராணுவம் எந்த தவறையும் செய்யவில்லை.
எல்.ரி.ரி.ஈ யினர் என்ன செய்தார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். 3 இலட்சத் திற்கும் அதிகமான பொதுமக்களை கேடயங்களாக பயன்படுத்தி இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினர். ஆனால் இராணுவம் பயங்கரவாததை நசுக்க முயற்சி செய்தது. ஆனால் 40 ஆயிரம் பொது மக்கள் கொல்லப்பட்டார்கள் என கூறுவது பொய் என அவர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment