இலங்கையில் எதிர்வரும் மார்ச் மாதமளவில் மின்னஞ்சல் மூலம் உச்ச நீதிமன்றில் வழக்குத் தொடர மக்களுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட உள்ளதால் அதற்கான ஏற்பாடுகள் தற்போது செய்யப்பட்டு வருவதாக உச்ச நீதிமன்ற பதிவாளர் நாயகம் மஹேசி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த முறையானது தூரப் பிரதேசங்களில் இருப்பவர்கள் உரிய நேரத்தில் நலன்களைப் பெற்றுக்கொள்ள இந்த வழி உதவும் என்பதுடன் இந்த முறையில் முதல் கட்டமாக அடிப்படை உரிமை மீறல்கள் தொடர்பில் மின்னஞ்சல் ஊடாக முறைப்பாடு செய்து வழக்குத் தொடர முடியும் என்பதுடன் இது ஒரு நாளின் எந்த நேரத்திலும் அதாவது நள்ளிரவு கூட மின்னஞ்சல் மூலம் வழக்குத் தொடரலாம் எனத் தெரிவித்தார்.
மேலும் இந்த புதிய நடைமுறை நடைமுறைக்கு வரும் போது முறைப்பாட்டாளருக்கு பயண செலவுகள் கிடையாது என்பதுடன் வழக்கு தொடர்பான மூல ஆவணங்களை பின்னர் நீதிமன்றிடம் ஒப்படைக்க முடியும் என தெரிவித்தார்.
No comments:
Post a Comment