Monday, January 20, 2014

இலங்கைக்கு எதிராக சிலர் சுமத்தும் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை - அவுஸ்திரேலிய பாராளுமன்ற குழு

இலங்கை தொடர்பாக திருப்தி அடைய முடியும் எனவும், வடக்கு தொடர்பான தெளிவும் கிடைத்தது எனவும், வட பகுதியின் அபிவிருத்தி பாராட்டத்தக்கது என அவுஸ்தி ரேலிய பாராளுமன்ற குழு தெரிவித்துள்ளது. இலங்கைக்கு எதிராக சிலர் சுமத்தும் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை எனவும், வடமாகாணம் அபிவிருத்தியடைந்துள்ளதாகவும் அவுஸ்திரேலிய பாராளுமன்ற குழு தெரிவித்துள்ளது.

மீள்குடியமர்த்தப்பட்டுள்ள மக்களின் உட்கட்டமைப்பு வசதிகள் பாராட்டதக்கவை எனவும் அவர்கள் தெரிவித்தனர். வடக்கில் தற்போதைய நிலைமைகளை ஆராயும் பொருட்டு அவுஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் ஜெனீ தலைமை யிலான 4 பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று யாழ்பாணத்திற்கு வருகை தந்தனர்.

இவர்கள் வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரிசிறியை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர். மாகாண ஆளுனர் செயலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது யுத்தத்தின் பின்னர் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அப்pவிருத்தி திட்டங்கள், மீள்குடியேற்றம், வாழ்வாதார உதவி திட்டங்கள் உட்பட பல்வேறு திட்டங்கள் தொடர்பாக ஆளுனரினால் இவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டதுடன் எதிர்கால செயற்திட்டங்கள் தொடர்பாகவும் எடுத்துரைக்கப்பட்டன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com